தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் குடிபோதையில் இருந்த மூன்று இளைஞர்கள் கறிகடைகாரரை அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளி அண்ணாசிலை அருகே மீன்கொட்டைகை பகுதி சேவு மகன்  செல்வம் (45). இவருக்கு வேதவல்லி (38) என்ற மனைவியும், அம்பிகா என்ற மகளும், ராம்குமார் என்ற மகனும் உள்ளனர். இவர் வீட்டின் முன்புறம் சொந்தமாக கறிகடை வைத்து விற்பனை செய்து வருகிறார். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கறி வியாபாரம் இல்லாததால், கறி விற்பனையை நிறுத்தி வைத்திருந்தார்.




கறி கடையில் வியாபாரம் இல்லாததால், கடந்த சில நாட்களாக சிலர் மது அருந்தி வந்தனர். இது குறித்து அவர், அவர்களிடம், வியாபாரம் செய்யும் இடம், குடிக்ககூடாது என்று எச்சரித்து வந்தார். இதே போல் குறிப்பிட்ட சிலரை, செல்வம் எச்சரித்தும், அதனை மீறி அப்பகுதியில் மது பானத்தை குடித்து வந்தனர். தொடர்ந்து, பாட்டில்களை உடைத்து போட்டும், கப்புகள், சிகரெட்களை வீசி சென்றதை பார்த்து, செல்வம், எச்சரித்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட மூன்று இளைஞர்கள், கறி வெட்டும் மரத்தில் அமர்ந்து மது குடித்தனர். இதனை செல்வம் கண்டித்து, அருகில் வீடுகள் உள்ளன, அங்கு பெண்கள், குழந்தைகள் உள்ளனர். இது போல் குடித்தால், வசிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் வேறு இடத்திற்கு சென்று மது அருந்துங்கள் என கூறியுள்ளார்.




இதனால் செல்வத்திற்கும், மது அருந்தி கொண்டிருந்த மூன்று  இளைஞர்களும் தகாத வார்த்தைகள் பேசியதால், தகராறு ஏற்பட்டது. இதனால் மேலும் கைகலப்பு ஏற்பட்டதால் பலமாக தாக்கினர். ஆனாலும் செல்வம், இந்த இடத்தில் மது அருந்த கூடாது என்று தொடர்ந்து எச்சரித்ததார். அப்போது, மூன்று பேரில் இருந்த இளைஞர் ஒருவர்,  தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வத்தின் இடது கழுத்தில் கொடூரமாக வெட்டினார். அப்போது, இதனை தடுக்க வந்த, அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீது அரிவாளை வீசினார். இதில், வெட்டியவருடன் குடிக்க வந்த இளங்கோவன் மகன் அனந்தகிருஷ்ணன் (28) வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வெட்டுப்பட்ட செல்வத்தை திருக்காட்டுப்பள்ளி அரசு பொது  மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்தாக கூறினார்.  பின்னர் வெட்டு காயம் அடைந்த அனந்தகிருஷ்ணனை, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.


இது குறித்து தகவல் கிடைத்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் செல்வத்தின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக சவ கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள இடத்தில் மறைந்திருந்த, அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் (50) இவரது  மகன்கள் காசிராஜா (17), அனந்தகிருஷ்ணன்(23), ஆனந்த் மகன் நாகராஜன் (30) மற்றும் நடராஜன் மகன் இளங்கோவன் (53) ஆகிய நான்கு பேரையும் திருக்காட்டுப்பள்ளி போலீசார், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.