கும்பகோணம் அருகே திருபுவனம் காங்கேயம்பேட்டையைச் சேர்ந்தவர் பாட்டையன்- மாலினி. இவர்களது மகன் சசிகரன் (9). இவர் அணைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில், மாலினி தனது கைக்குழந்தையான கீர்த்திஹசனுக்கு மாடியில் உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், மாடி பகுதிகளில் பாசிபடர்ந்து வழுக்கும் நிலையில் இருந்தது. அப்போது மாடியில் விளையாடி கொண்டிருந்த சசிகரன், மாடி பகுதி வழுக்கியதால், அருகில் அமைக்கப்பட்டிருந்த தகர சீட்டில் நிலைதடுமாறி கைப்பட்டது. அதில் மின்கம்பத்திலிருந்து செல்லும் ஒயரில் கசிவு ஏற்பட்டு, தகர சீட்டில் உரசிக்கொண்டிருந்தது. இதனை அறியாமல், சசிகரன், கைப்பட்டதால், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதில் சம்பவ இடத்திலேயே சசிகரன், துடிதுடித்து இறந்தான். இதனையறிந்த, தாய் மாலினி, தனது மகன் மின்சாரம் தாக்கி இறப்பதை பார்த்து கதறி அழுதார். அழுகுரல் கேட்டு ஒடி வந்த உறவினர்கள், மின்சாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். அதன் பின்னர், சசிகரனின் உடலை மீட்டு, திருவிடைமருதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




வயலில் களை எடுத்த போது இடிதாக்கி பெண் சாவு


கும்பகோணம் அருகே துக்காச்சி ஏரிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ராதிகா (35). இவர் அதே கிராமத்தை சேர்ந்த சில பெண் கூலி விவசாய தொழிலாளர்களுடன்,  வயலில் கூலிக்கு சென்று நெற்பயிரில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்தாலும், பண்டிகையை  கொண்டாடுவேண்டும் என்பதற்காக மழையையும் பொருட்ப்படுத்தாது, வயலில் பெண் விவசாய தொழிலாளர்கள் களைகளை எடுத்து வந்தனர். அப்போது, திடிரென பலத்த சத்தத்துடன் இடி இடித்து, மின்னல் தோன்றியது. இதில் வயலில் நின்றிருந்த ராதிகா மீது இடி தாக்கியது.  இடி தாக்கியதில் ராதிகா அதே இடத்தில் உயிரிழந்தார். இதனையறிந்த மற்ற பெண் விவசாயிகள், அலறி அடித்து கொண்டு கரைக்கு ஓடினர்.


ஆனால் ராதிகா மட்டும் வராததால், அவரை திரும்பி பார்த்த போது, வயலில் விழந்து கிடந்தார். ராதிகாவை அழைத்து பார்த்த போது, அவர் பதில் ஏதும் கூறாததால், உடன், வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ராதிகாவின் அருகில் சென்று பார்த்த போது, ராதிகா இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் உறவினர்கள் ராதிகாவின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாச்சியார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவிடைமருதுார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.