மயிலாடுதுறையில் வ.உ.சி மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை முன்னிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் வெடி வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 151 வது பிறந்தநாள் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் 135 வது பிறந்தநாளினை இன்று தமிழகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.




 


குறிப்பாக முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தின விழாவாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்டத் தலைவர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விஜய் ரசிகர்கள் பங்கேற்றனர். 


Vidamuyarchi Update: அஜித்தின் ‘விடாமுயற்சி’ அப்டேட் எப்போது?.. வீடியோ மூலம் பதில் சொன்ன மகிழ் திருமேனி..!




அதனைத் தொடர்ந்து வெடி வெடித்தும், அப்பகுதி  பொதுமக்கள், ஓட்டுநர்களுக்கு  இனிப்புகளை வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கத்தினர் தேச தலைவர்களை போற்றுவதும், பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Rohit Sharma: ஒன்லீ ஒன் சூப்பர் ஒன்.. ஆசியக் கோப்பையில் ரோகித் சர்மா புதிய சாதனை, முதல் இந்தியராமே..!