தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்க கூட்டியியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமார் தலைமையில் விவசாயிகள், ஒற்றை காலில் நின்றும், அலுவலக வாயில் முன்பு தரையில் படுத்து உருண்டும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அந்தந்த ஊர் சிட்டா, அடங்கல் வாங்கும் விவசாயிகள் அந்தந்த ஊரிலேயே நெல் விற்பனை செய்ய வேண்டும். வெளி மாவட்ட சிட்டா, அடங்கல் வாங்கி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்யக்கூடாது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  திறக்கட்டும் என்று வியாபாரிகள் கத்துக்கொண்டிருக்கின்றார்கள். நெல் விற்பனை செய்வதை தடுக்க அந்தந்த ஊரிலேயே சிட்டா, அடங்கல் வாங்கி அந்தந்த ஊரிலேயே விற்பனை செய்ய வேண்டும். இதனால் தஞ்சாவூர் மாவட்ட நெல்மூட்டைகளை விரைவில் கொள் முதல் செய்ய முடியும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்




அது மட்டும் இல்லாமல், தஞ்சாவூர் மாவட்டதில் குறுவை அறுவடை அதிகமாக அளவில் அறுவடை செய்து வருவதால், நேரடி நெல்கொள் முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து, ஒரு நாளொன்றிற்கு 1200 மூட்டைகளை கொள்முதல்செய்ய வேண்டும். 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை மத்திய மாநில அரசுகள் உடனே வழங்க வேண்டும். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், அறுவடைக்கு தயாரான நெல் கதீர்கள், வயலிலேயே சாய்ந்து விட்டது. இனி வரும் நாட்களில், தொடர்ந்து மழை பெய்தால், நெல் கதீர்களில் உள்ள நெல் மணிகள் பதறாகும், முளைக்கும் நிலை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறினர். விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி நெல் மூட்டைகளை கொள் முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள குறுவை சாகுபடிக்கு, அதிகாரிகள், நேரில் சென்று பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  நேரடி நெல்கொள் முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையத்திற்கு தேவையான சாக்கு, இயந்திரங்கள், சணல்களை வழங்கியும், போதுமான பணியாளர்களை நியமித்து, தேங்கியுள்ள நெல் மூட்டை போர்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்.




தற்போது கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைத்திருப்பதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு சலுகையின் பேரில், அவர்களது நெல் மூட்டைகளை, ஈரப்பதம் அதிகமாகி வழங்கி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தின் போது தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.