தஞ்சாவூர்: பிறவியிலேயே இருதய குறைபாடு இருந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி இருதய குறைப்பாட்டை தஞ்சை மருத்துவக்கல்லூரி இருதய பிரிவு டாக்டர்கள் சரி செய்துள்ளனர். இதற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் பாராட்டுக்கள் தெரிவித்தார்.
டாக்டர்களை பாராட்டிய மருத்துவக் கல்லூரி முதல்வர்
இதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர்களை பாராட்டி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் பேசினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளிகளுக்கு மலர்ச்செண்டு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பிறவியிலேயே இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காயில் வைத்து குறைபாட்டை சரி செய்யப்பட்டது. இதற்கு மகுடம் சேர்க்கும் வகையில் இருதய பிறவி குறைபாடு atrial septal குறைபாடு ASD - Intra Cardiac உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி இருதய உட்செலுத்தி சிகிச்சை முறை மூலம் காயில் (Spring ) வைத்து இருதய குறைப்பாட்டை சரி செய்யும் முறையில் மூன்று நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய உட்செலுத்தி கதிரியிக்க ஆய்வுகூடத்தில் 2019 ஆம்ஆண்டிலிருந்து இதுவரை 9400க்கும் மேற்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாரடைப்பிற்கு உடனடியாக (ஒரு மணி நேரத்திற்குள்) செய்யும் சிகிச்சை 1437, இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் 2428 சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இருதய துடிப்பு குறைவான நோயாளிக்கு 48 நிரந்தர இருதய துடிப்பு கருவி, 153 தற்காலிக இருதய துடிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் பிறவியிலேயே இருதய குறைபாடு (PDA - Extra Cardiac) குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காயில் வைத்து குறைபாட்டை சரி செய்யப்பட்டது. இதற்கு மகுடம் சேர்க்கும் வகையில் இருதய பிறவி குறைபாடு atrial septal குறைபாடு ASD - Intra Cardiac உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்றி இருதய உட்செலுத்தி சிகிச்சை முறை மூலம் காயில் (Spring ) வைத்து இருதய குறைப்பாட்டை சரி செய்யும் முறையில் மூன்று நோயாளிக்கு (59வயது, 39 வயது, 4வயது) சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இலவசமாக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளது. இச்சிகிச்சை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் பாலாஜிநாதன் மற்றும் மாநில திட்ட மேலாளர் TAEI மருத்துவர் மருது துரை வழிகாட்டுதல்படி இருதய துறை தலைவர் தலைமையில், மயக்கவியல் துறை தலைவர் மற்றும் குழந்தைகள் நல துறை தலைவர், RBSK துணையுடன் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராமசாமி, மருத்துவ நிலைய அலுவலர் டாக்டர் செல்வம், மயக்கவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சாந்தி பால்ராஜ், இருதயவியல் துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ஜெய்சங்கர், இதயவியல் பேராசிரியர் டாக்டர். அருண் ஆரோக்கிய ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தஞ்சாவூர், மருத்துவக் கல்லூரி, இருதய குறைபாடு, பாராட்டு, பெருமிதம்