தஞ்சாவூர்: வீட்டுக்கு அஸ்திவாரமாய், வீட்டை காக்கும் மேற்கூரையாய் தங்களை வருத்திக் கொண்டு குடும்பத்திற்காக சோதனைகளை சாதனைகளாக்கி பாரதி கண்ட வீரமங்கைகளாக உலா வரும் பெண்கள் வீர வேங்கைகள்தான் என்றால் மிகையில்லை. தன்னை மதிப்பவருக்கு மலராகவும், மிதிப்பவர்களுக்கு வீர மங்கைகளாகவும் எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வெற்றி பெற முழு மனதுடன் முயற்சி எடுக்கும் பெண்கள் சாதனையாளர்களாக உலா வருகின்றனர். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் என்ற பாரதியாரின் கருத்து இன்று நினைவாகி வருகிறது. இங்கு ஆணுக்கு நிகராக சரிக்கு சமமாய் எத்துறையாக இருந்தாலும் அதில் வல்லமை காட்டி சமுதாயத்தை தங்களை நோக்கி அண்ணாந்து பார்க்க வைத்துள்ளனர் மகளிர். அந்த வகையில் தன் குடும்பத்திற்காக கல்வி ஒரு பக்கம், பகுதி நேர பணி மறு பக்கம், தாய்க்கு உறுதுணையாக விடுமுறை நாளில் இளநீர் விற்பனை மறு பக்கம் என்று சுற்றி சுழலும் தஞ்சையின் சிங்கப் பெண் பற்றி பார்ப்போம். தஞ்சையை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜன் சிலையை விடுமுறை நாட்களில் கடந்து செல்பவர்களுக்கு இந்த பெண் நன்கு பரிட்சயம் ஆகி இருப்பார். இளநீரை எடுக்கும் கரங்கள் வெகு வேகமாக அரிவாள் அதை சீவி வாடிக்கையாளர்கள் கரங்களில் சில நொடிகளில் கொண்டு சேர்க்கும் அந்த கல்லூரி மாணவிதான் காயத்ரி. தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு அக்கா ஒருவரும், தம்பி ஒருவரும் உள்ளனர். அப்பா முருகானந்தம். சமீபத்தில் காலமாகி விட்டார். அம்மா சரிதா. பல ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை பெரிய கோயில் மற்றும் மேல வீதி பகுதியில் தள்ளுவண்டியில் இளநீர் விற்று அன்றாட பிழைப்பை நடத்தி வருபவர்கள். தந்தையின் உடல்நலன், மிகுந்த சிரமப்படும் தாய்க்கு பக்கத்துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக காலையில் கல்லூரி, மாலையில் பகுதிநேர பணி, விடுமுறை நாளில் தாய்க்கு துணையாக இளநீர் கடை என்று சுற்றி சுழலும் பம்பரமாக காயத்ரி இருக்கிறார்.
படிப்பு ஒரு பக்கம், குடும்ப வருவாய்க்காக உழைப்பு மறுபக்கமாக சுழலும் தஞ்சை கல்லூரி மாணவி
என்.நாகராஜன் | 01 Apr 2023 05:14 PM (IST)
காலையில் கல்லூரி, மாலையில் பகுதிநேர பணி, விடுமுறை நாளில் தாய்க்கு துணையாக இளநீர் கடை என்று சுற்றி சுழலும் பம்பரமாக காயத்ரி இருக்கிறார்.
இளநீர் சீவும் கல்லூரி மாணவி காயத்ரி.
NEXT PREV
Published at: 01 Apr 2023 05:14 PM (IST)