தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதிவு துறை சார்பில் காகிதம் இல்லா ஆவண பதிவினை செய்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Continues below advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 22ம் தேதி பத்திர பதிவுத் துறையில் ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதில் காகிதம் இல்ல ஆவண பதிவு, நேரடி வருகை இல்லா  ஆவண பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம்,  புலன வழி தகவல் தொடர்பு, கைபேசி செயலி, மைய கணினி வழி சான்றிதிட்ட நகல் வழங்குதல், க்யூ ஆர் கோடு பேமெண்ட், மேம்படுத்தப்பட்ட வில்லங்கச் சான்று வழங்குதல் ஆகிய சேவைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதை பயன்படுத்தி பொதுமக்கள் இணைய வழியில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமல் சேவைகளையும் செய்து கொள்ளலாம்.  மேலும் முதல் மனைப்பிரிவு விற்பனை ஆவணங்கள் மற்றும் முதல் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்கள், ரசீது ஆவணங்கள், உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆவணங்கள், விற்பனை உடன்படிக்கை ஆவணங்கள், v அடமான ஆவணங்கள், சுவாதீனத்துடன் கூடிய அடமான ஆவணங்கள், நம்பக ஆவணங்கள், குத்தகை உடன்படிக்கை ஆவணங்கள், சுவாதீனம் இல்லாத மேல் நடமான ஆவணங்கள், சுவாதீனத்துடன் கூடியர் மேல் அடமான ஆவணங்கள் ஆகிய சேவைகளும் நேரில் வராமல் செய்து கொள்ளலாம்.

Continues below advertisement

மேலும் காகிதம் இல்லா ஆவண பதிவினை இடைவெளி உள்ளது கைப்பேசி வழி அனைத்து வகையான ஆவணங்களையும் பதிவு செய்து கொள்ளும் வசதியும் மற்றும் பல சேவைகளும் செயல்பாட்டில் உள்ளது. இதை பதிவு பொதுமக்கள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள முகவரியில் உள் நுழைந்து பயன்பெறலாம். எனவே இதனை பொதுமக்களிடத்தில் எடுத்துச் செல்லும் வழியில் பத்திர பதிவுத்துறை சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காகிதம் இல்லா ஆவண பதிவு என்பது ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அல்லது மின்னணு வடிவத்திலேயே உருவாக்கப்பட்டு, மைய களஞ்சியத்தில் சேமிக்கப்படுகின்றன. பயன்பாட்டு வசதி: வீடு அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே ஆவணப் பதிவு, நேரடி வருகை இல்லா (faceless) வசதி, மற்றும் தானியங்கி பத்திர உருவாக்க வசதிகள் உள்ளன. பாதுகாப்பு மற்றும் வேகம்: காகிதப் பயன்பாடு குறைவதால் ஆவணங்கள் தொலைந்து போவது தவிர்க்கப்படுகிறது. டிஜிட்டல் கையொப்பங்கள் மற்றும் க்யூ.ஆர். கோடு (QR Code) மூலம் பணம் செலுத்தும் வசதி, செயல்முறையை வேகமாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது.

தேவையற்ற காகிதக் கோப்புகளைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் ஆவணங்களை விரைவாகத் தேடி எடுத்துப் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.