மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க மாநில மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கருப்பையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் முத்தையா, துணைத்தலைவர் பழனியாண்டி, மாவட்ட செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆ.மணிவண்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக்கூட்டத்தில், மத்திய அரசு வழங்கி வருவது போல் தற்போதுள்ள மருத்துவப்படி 300 ரூபாயை, 1000 ரூபாயாக ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்களுக்கு ஆரம்ப காலத்தில் அனுமதிக்கப்பட்ட ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி குறித்த விவரம் மட்டுமே கொடு ஆணை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது பெரும் தொகை விவரம் தெரியவில்லை. ஆதலால் ஆண்டிற்கு ஒரு முறையாவது அவர்கள் பெரும் ஓய்வூதியத்தை தெரிந்து கொள்ள தக்க ஏற்பாடுகள் செய்ய உள்ளாட்சி நிதித்தணிக்கை இயக்குனர் அவர்களை கேட்டுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் கலாச்சாரங்களின் சங்கமம் ஆகும் - மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான்
அதேபோன்று அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பாரபட்சம் காட்டாது அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் ஆயிரம் வழங்கிடவும், மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9000 ரூபாயை தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் அனுமதித்திட வேண்டும் உள்ளிட்ட உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றிதர வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ஆ.மணிவண்ணன் கூறுகையில், ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி உள்ளாட்சி தனிக்கையில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசால் அமல்படுத்தப்படும் மருத்துவகாப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு திட்டத்திற்கு 80 ரூபாய் பிரியம் பிடித்தபோது 50 ஆயிரம் நிதிவழங்கினர். தற்போது பிரிமியம் 150 உயர்த்தி வாங்குவதால் குடும்ப பாதுகாப்புத் தொகை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை 30 மாதங்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் 80 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்தொகை 70 வயதில் இருந்து வழங்குவதாக தெரிவித்ததை உடன் நடைமுறைப்படத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் குறைத்தீர்நாள் கூட்டத்தில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கொடுக்கப்படும் குறைகளுக்கு உரிய பதில்கொடுக்கக்காதது கண்டனத்திற்கு உரியது என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்