Tirupati Ticket Bookings : திருமலை திருப்பதி கோயிலில் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான தரிசன டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது.


திருப்பதி தரிசனம்:


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற பல நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம்.  இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டணம் செலுத்தியும் பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தரிசனம் செய்கின்றனர். இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படுகின்றது.


இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 31ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பின்படி, ஏப்ரல் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையில், 300 ரூபாய் கட்டணத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை, வரும் 27ஆம் தேதி அன்று காலை 11 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.


ராமநவமி:


இதனிடையயே ஏழுமலையான் கோயிலில் வரும் 30ஆம் தேதி ஸ்ரீராம நவமி விழா நடைபெற உள்ளது. அதே சமயத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷக விழாவும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 30ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மாலையில் 6.30 மணி முதல் 8 மணிவரை அனுமந்த வாகனத்தில் ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா விழா நடைபெற உள்ளது. 


முன்னதாக, திருப்பதி ஏழுமலையான கோயிலில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் நடப்பாண்டு உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடியாக அதிகரித்துள்ளது. பட்ஜெட் தாக்கலில் ரூ.2937.82 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ரூ.3,000 கோடி வருவாயாகக் கிடைத்திருந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Anbumani: 'ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு பிரச்சினை.. அனைவருக்குமே என்.எல்.சி.யால் சிக்கல்' - அன்புமணி ராமதாஸ்


Kachchatheevu : ’கச்சத் தீவில் புத்தர் சிலை’ புனித அந்தோணியார் ஆலய விழாவை முடக்கும் முயற்சியா..?