தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வணிகப்பகுதி ஊழியர்கள் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

Continues below advertisement

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கடந்த 27ம் தேதி முதல் வரும் நவம்பர் 2ம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை நடத்துகிறது. இதை ஒட்டி தஞ்சாவூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வணிகப்பகுதி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வரும் 30ஆம் தேதி தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வாடிக்கையாளர் சேவை மையங்களில் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமை பயன்படுத்தி பிஎஸ்என்எல் சேவைகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள்ள நிவர்த்தி செய்து கொள்ளலாம். தற்போது பிஎஸ்என்எல் விழாக்கால சலுகையாக ஒரு ரூபாய்க்கு ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை வழங்கி வருகிறது.

Continues below advertisement

இத்திட்டத்தில் தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா, 300 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகிய சேவைகளை பெறலாம். இதன் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மற்ற நிறுவனங்களில் இருந்து மாற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும் இத்திட்டம் பொருத்தும். 

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சம்மன் திட்டம் என்ற புதிய வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.ரூ.1812 விலையில் வழங்கப்படும் இந்த திட்டம், இலவச சிம் கார்டு, தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்.எம்.எஸ், வரம்பற்ற அழைப்பு மற்றும் பிற தொகுக்கப்பட்ட சலுகைகளுடன் 365 நாட்கள் வேலிட்டி வழங்குகிறது. மேலும் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணமின்றி ஆறு மாத இலவச பிஐடிவி சந்தாவைப் பெறுவார்கள். பி.எஸ்.என்.எல். தற்போது புதிய இ-சிம் இணைப்புகளை வழங்கி வருகிறது.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் பைபர் வழி அதிவிரைவு இணைய சேவைகளை பெற ttps:/bookfibre.bsnl.cp.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறவாம். இத்தகவலை தஞ்சாவூர் பிஎஸ்என்எல் பொது மேலாளர் பால.சந்திரசேனா தெரிவித்துள்ளார்.