கரும்பு உழவர்களை ஏமாற்றி திவாலான திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு

  அரைத்த கரும்பிற்கு, அவர்களுக்கு சேர வேண்டிய சுமார்  100 கோடியை காலதாமதத்திற்கு உரிய வட்டியுடன் முழுவதுமாக வழங்கிட  வேண்டும்,  அப்பாவி விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி, ஏமாற்றி, மோசடி செய்து சுமார் 500 கோடி வங்கியில் விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கிய ஆலை நிர்வாகிகள் உடந்தையாக இருந்த வங்கி அலுவலர்கள் மீது சிபிஐ நடவடிக்கை  வேண்டும்,  ஆலய  நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் கையில் கரும்புடன், தேசியக்கொடி ஏந்தி,  பட்டை நாமத்துடன்  நுாதன ஆர்ப்பாட்டம், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாபநாசம் தாலுக்கா திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்றது.




ஆரூரான் சர்க்கரை ஆலை யின் முறைகேடான,  மோசடியான நிர்வாகத்தினால் கரும்பு விவதாயிகளின் அரைக்கப்பட்ட கரும்பிருக்கு விவசாயிகளுக்கு  வரவேண்டிய, சட்டபூர்வ மாநில அரசின் பரிந்துரை விலை மற்றும் காலதாமதத்திற்கு உரிய வலை உள்பட சுமார் ரூ. 100 கோடியும், விவசாயிகளுக்கு  கரும்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பூர்த்தி செய்யப்படாத பல விண்ணப்பங்களில் விவசாயிகளிடம் இருந்து கையெழுத்துக்களை பெற்று, வங்கி அலுவலர்களின், மறைமுக ஒத்துழைப்புடன் பெருநிறுவன கடன் என்ற பெயரில் ஆலய நிர்வாக சதித் திட்டத்தின் கீழ் 500 கோடிக்கு மேல் விவசாயிகளின் பெயரில் போலி கடன்களை பெற்று ஆலை நிர்வாகம் அதனை வங்கிகளுக்கு செலுத்தாமல் விவசாயிகளுக்கும், கரும்புக்கான தொகையை தராமல் ஏமாற்றி வந்த நிலையில்,  வங்கிகள் கடன் வசூலிக்க ஆலையின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில்,  திவாலானது ஆலையை  வேறு ஒரு சாராய ஆலை நிர்வாகம் ஏற்று நடத்துவதை தெரிய வருகிறது.







தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி முயற்சி மேற்கொள்ள வேண்டும். விவசாயிளின் பெயரில் மோசடியா கடன் பெற்ற ஆலைஅலுவலர்கள் மீதும், வங்கி அலுவலர் மீதும் சிபிஐ நடவடிக்கை கோரி கரும்பு விவசாயிகள், கையில் கரும்புடன்,  தேசியக் கொடியை ஏந்தி, பட்டை நாமமத்துடன், ஆலையின் அருகில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசும், மத்திய  அரசும் பெரு நிறுவனங்களுக்கு, சாதகமாக செயல்டாமல், கரும்பு விவசாயிகளின்  மீது உண்மையான அக்கறையுடன், அப்பாவி விவசாயிகளுக்கு, துரோகம் செய்யாமல் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு கோவிந்தராஜ் அவர்களின் கடிதத்தின் படி, உடனடி முழு கரும்பு தொகையும் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயி உதயகுமார் தலைமை வகித்தார். விவசாயிகள் சின்னதுரை, மகாலிங்கம், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுவாமிமலை சுந்தர சுவாமிநாதன் கண்டன உரையாற்றினார். இறுதியில் விவசாய சரபோஜி நன்றியுரை கூறினார்.