நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

 

நாகை மாவட்டம் நாகை நாகூர் இடையே அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில்  தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை கல்லூரி முடித்து பேருந்தில் செல்ல வந்த மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

 



 

இரண்டு குழுவாக மோதிக்கொண்ட மாணவர்கள் ஒரு மாணவனை கீழே தள்ளிவிட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். வாயில் இரத்த காயங்களுடன் அடிவாங்கிய மாணவர்கள் தப்பி ஓடியதால், பேருந்து ஏற வந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நாகையில் தனியார் கல்லூரி கல்லூரி மாணவர்கள் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிகொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 



 



நாகையில் சுதந்திர தின விழாவை வலியுறுத்தி, தேசிய கொடியுடன் டிராக்டரில் ஏறி நாகூருக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற பாஜகவினருக்கும், போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 



 

நாட்டின் 75,வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜகவினர் கடந்த ஒரு வார காலமாக கடலிலும் கரையிலும் தேசியக் கொடியை ஏந்திச் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டாடி வருகின்றனர். அதேபோல் இன்று நாகை மாவட்டம் சிக்கலில் பாஜகவினர் டிராக்டரில் தேசியக்கொடி ஏந்தியவாறு நாகூர் வரை செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்காக 40க்கும் மேற்பட்ட டிராக்டரில் பாஜக மாநில செயலாளர் வரதராஜன் தலைமையில் வந்த பாஜகவினர், சிக்கலில் ஒன்று கூடி அங்கிருந்து டிராக்டரில் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால், தடையை மீறி தேசிய கொடியுடன் டிராக்டரில் ஊர்வலம் செல்லக்கூடாது என்று பாஜகவினரை தடுத்து நிறுத்தினர்.

 


 

இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது இதையடுத்து போலீசாரின் தடையை மீறி ஊர்வலம் சென்றால் பாஜகவினரை கைது செய்வோம் என நாகை ஏடிஎஸ்பி கென்னடி எச்சரிக்கை விடுத்தார். நீண்ட நேரம் வாக்குவாதத்திற்கு பின்னர் 100 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல போலீசார் அனுமதி அளித்ததை தொடர்ந்து பாஜகவினர் டிராக்டரில் தேசிய கொடி ஏந்தியவாறு சிக்கலில் இருந்து பொரவச்சேரி வரை ஊர்வலமாக சென்றனர். பாஜகவினரின் டிராக்டர் ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால், பரபரப்பு நிலவியது.




 

 


.