75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 


நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுதப் பெருவிழாவாக இந்த ஆண்டு முழுவதும் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றி பொதுமக்கள் தங்கள் தேச பக்தியினை  வெளிப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில்  தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் போன்றவை இல்லம் தோறும் தேசியக்கொடியை பொதுமக்கள் இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று காலை சேந்தமங்கலத்தில் இருந்து தேசியக்கொடி ஏந்தியபடி மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சேந்தமங்கலத்தில் தொடங்கிய இந்த மினி மாரத்தான் ஒட்டம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மத்திய பல்கலைக்கழகத்தை வந்தடைந்தது. 




இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில்  திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள் மாண மாணவிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் இல்லம் தோறும் தேசியக்கொடி என்கிற திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. மத்திய பல்கலைக்கழக வாயிலில் இந்த மினி மாரத்தான் நிறைவு பெற்ற பின்னர் தேசிய கீதத்துடன் இந்த நிகழ்வு முடிவடைந்தது. இதே போன்று நேற்று  பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இல்லங்கள் தோறும் 600க்கும் மேற்பட்ட தேசிய கொடிகளை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வை துணைவேந்தர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அவர் பண்ணை வளாகம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று தேசிய கொடியினை கொடுத்து அதனை வீடுகளில் ஏற்றி வைக்க வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் கேந்திர வித்யாலயா மாணவர்கள் இணைந்து ஆதமங்கலம், நாககுடி, சக்கரமங்கலம், தியாகராஜபுரம், நீலக்குடி பெரும்புகளூர், கருணாகர நல்லூர் போன்ற கிராமங்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளில் தேசியக் கொடியினை அளித்து பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 




முன்னதாக இதன் தொடக்க நிகழ்வு பண்ணை வளாகம் பேராலயத்தில் நடைபெற்றது. அதில் தேசிய கொடியின் முக்கியத்துவத்தையும் அதை வீடுகளில் ஏற்ற வேண்டிய அவசியத்தையும் துணைவேந்தர் கிருஷ்ணன் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பதிவாளர் ,பேராசிரியர்கள் மாணவர்கள், கிராம பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அதனை தொடர்ந்து  திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு கோவிட் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதில்  பூஸ்டர் தடுப்புசி எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு தேசியக்கொடியினை அளித்து அவர்களது வீடுகளில் ஏற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று மத்திய பல்கலைக்கழக தரப்பு தெரிவித்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண