தஞ்சாவூர்: சென்னையில் நடந்த Falling Walls Lab Chennai 2025 போட்டியில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இறுதியாண்டு பி.டெக் மாணவி ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் முதல் பரிசை வென்று சாதனைப்படைத்துள்ளார்.
சர்வதேச கண்டுபிடிப்பு மற்றும் புதுமை மேடையில் இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இறுதியாண்டு பி டெக் மாணவி ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.
மாணவி ஜெயஸ்ரீ “Breaking the Wall of Suffocating Safety Masks” என்ற தலைப்பில், சுவாசிக்க முடியாத முகக் கவசங்களை சீரமைக்கும் புதிய வடிவமைப்பை முன்வைத்து இந்தப் போட்டியில் கலந்துகொண்டார். இந்த கண்டுபிடிப்பு மருத்துவத்துறையும், தொழிற்சாலைகளும் பயன்படுத்தும் முகமூடிகளை வசதியான மற்றும் பாதுகாப்பான முறையில் மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவரது இந்த புதிய வடிவமைப்பு நடுவர்களின் பாராட்டுக்களை குவித்தது. தொடர்ந்து போட்டியில் மாணவி ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசன் முதல் பரிசை வென்றார். நடுவர்களின் ஏகோபித்த பாராட்டுக்களுக்கு மத்தியில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிகழ்ச்சியை உயிர்தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் டி.எஸ். பிரபாகரனின் தலைமையில், பயோஎன்ஜினியரிங் பள்ளி மற்றும் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் அலுவலகம் இணைந்து மிகச்சிறப்பாக நடத்தின. Falling Walls Lab என்பது உலகளாவிய இளம் ஆராய்ச்சியாளர் தங்களின் சிந்தனைகளை வெளிப்படுத்தும் மேடை. மாணவி ஜெயஸ்ரீயின் யோசனை மற்றும் அதன் புதுமை சமூக சிந்தனையுடன் வெளியாகி உள்ளது. அற்புதமான செயல்பாடாக அமைந்துள்ளது என்று டாக்டர் டி.எஸ்.பிரபாகரன் பாராட்டினார்.
உயர்த்தொழில்நூட்பத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சஹாபுதீன் நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த வெற்றிக்காக பெரும் பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்க்கது. இவர் நிகழ்ச்சியின் அனைத்து நிலைகளிலும் வழிகாட்டி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செயல்படுவதற்கு ஊக்கமளித்தார்.
வெற்றி பெற்று பெருமை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ ஸ்ரீநிவாசனை துணைவேந்தர் டாக்டர் முத்தமிழ்செல்வன் செல்லமுத்து, பதிவாளர் டாக்டர் பொன்னுசாமி ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு மற்றும் பெர்லின் நகருக்கு செல்வதற்கான விமான பயணச்சீட்டை வழங்கினர். ஜெயஸ்ரீ தற்போது ஜெர்மனி, பெர்லினில் நடைபெறும் Falling Walls Science Summit 2025ல் SRM மற்றும் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொள்ள உள்ளார்.
டீன் டாக்டர் லீனஸ் மார்ட்டின், இன்டர்நேஷனல் ரிலேஷன் உதவி இயக்குனர் டாக்டர் அனுபமா மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியை பாராட்டினார். இந்த வெற்றி எஸ்ஆர்எம் இன் புதுமை ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்ன டாக்டர் லீனஸ் மார்ட்டின் பெருமையுடன் தெரிவித்தார் ஜெயஸ்ரீ பெர்லினின் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் மாணவியின் சாதனையை எஸ்ஆர்எம் குடும்பம் பெருமையுடன் கொண்டாடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது