தஞ்சை மண்டலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் தஞ்சையில் 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது.



மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரிகுணசீலி வரவேற்றார். இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் பாரதி கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். குழந்தைகள் நலக்குழும தலைவர் உஷாநந்தினி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். போட்டிகளை தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், குழந்தைகள் பாதுகாப்பு மண்டல அலுவலர் நடராஜன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகள் இல்ல மாணவ, மாணவிகள் 1,200 பேர் பங்கேற்றனர். 100 , 200, 400 மீட்டர் ஓட்டப்போட்டிகள், குண்டு எறிதல், கபடி, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.


இன்று (வியாழக்கிழமை) கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று மாலை தஞ்சை தீர்க்க சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகிறார்.

பள்ளி ஆண்டுவிழா:


தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளி 14-ம் ஆண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான ஆண்டு விழா மண்வாசனை எனும் தலைப்பில் நடைபெற்றது. பள்ளித்தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி முதல்வர் விஜயாஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.





முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் ஆண்டறிக்கை வாசித்தார்.  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகையில்,  போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும். போட்டி தேர்வுகளை முழுமனதுடனும், விருப்பத்துடனும் எதிர்கொள்ளளும் சூழலுக்கு மாணவர்களை இப்பள்ளி அழைத்து செல்கிறது.

தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது. அதில் பல திறமைகள் கொண்ட மண்வாசமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். பிறந்த மண்ணை மணக்கச் செய்ய வேண்டும். தமிழ்மீது உண்மையான நேசம் கொள்ள வேண்டும்