தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் அடைந்துள்ளனர். குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியும் மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருப்பதால் பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் உரம் தெளிப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் பூச்சி தாக்குதலை தடுக்கும் வகையிலும் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, புதுகல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உட்பட பல பகுதிகளில் எலித் தொல்லை அதிகம் இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதையடுத்து வயல்களில் எலிகளை பிடிக்க கிட்டி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு வயல்களிலும் சுமார் 50 எலிகள் வரை பிடிபடுகின்றன. தற்போது 75 நாட்களை கடந்து பயிர்கள் செழிப்பாக வளர்ந்து வரும் நிலையில் பால் பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் எலித் தொல்லை அதிகம் இ இருப்பதால் அவை நன்கு வளர்ந்து வரும் பயிர்களை துண்டித்து சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதையடுத்து எலித் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில் எலி கிட்டி வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சை: பயிர்களை துண்டாக்கும் எலிகள்; வயல்களில் எலி கிட்டிகள் வைக்கும் விவசாயிகள்
என்.நாகராஜன் | 29 Dec 2022 02:22 PM (IST)
தஞ்சை அருகே புதுகல்விராயன், சித்திரக்குடி உட்பட பல பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ள வயல்களில் விவசாயிகள் எலி கிட்டி வைக்கும் பணிகளில் மும்முரம் அடைந்துள்ளனர்.
வயலில் எலி கிட்டி வைக்கும் பணியில் விவசாய தொழிலாளி
Published at: 29 Dec 2022 02:22 PM (IST)