மகாளய அமாவாசை திதி வரும் அக்டோபர்  மாதம் 6 ஆம் தேதி வருகிறது. அப்போது கடல், ஆறு மற்றும் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு பரிகாரங்கள் செய்தால் மூதாதையர்களின் ஆசி கிடைக்கும்  என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மஹாளய என்றால் கூட்டமாக கூடும் இடமாகும். மஹாளய அமாவாசை அன்று அனைவரும் ஒன்றாக கூடி, நமது முன்னோர்களுக்கு பரிகாரங்கங்கள் செய்வார்கள். அப்படி செய்தால் முன்னோர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்று இந்து மதத்தின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். ஆனால் புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.



இந்த சிறப்பு வாய்ந்த மஹாளய அமாவாசையை  முன்னிட்டு முதன் முதலாக கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும் ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரயிலினை மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி இயக்க உள்ளது. பாரத் தர்சன் அடிப்படையில்  இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் மதுரையில் இருந்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி புறப்பட்டு பிரயாக் (அலகாபாத்), அயோத்யா, காசி, கயா ,கொல்கத்தா, கனகதுர்கா ஆகிய இடங்களுக்கு 12 நாட்கள் சுற்றுலாவாக  செல்கிறது.




இதில்பயணம் செய்பவர்களுக்கு ரயில் கட்டணம், உணவு, தங்கும் வசதி, சுற்றுலா தலங்களுக்கு  சென்று வர வாகன வசதி உள்ளிட்ட அனைத்திற்கும் சேர்த்து கட்டணம்  ஒரு நபருக்கு 11340 ரூபாய் ஆகும்.  மதுரை ரயில் நிலையத்திலிருந்து 30 ஆம் தேதி புறப்படுகிறது. பாரத்  தர்சன் சுற்றுலா சிறப்பு ரயில் மதுரை ,திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலுார் போர்ட், விழுப்புரம், சென்னை எழும்பூர், நெல்லுார், விஜயவாடா வழியாக செல்கிறது. பயணிகள் ஏறவும் திரும்ப வரும்போது இறங்கவும்  வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்யும் பயணிகள், ரயில் பயணம் செய்யும் தேதிக்கு முன்னர் 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சாண்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்




மேலும் விபரங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி நிறுவன மதுரை கிளையை அணுகவும்.  இந்த சுற்றுலா சிறப்பு ரயிலை  தஞ்சை மாவட்ட பயணிகள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே  உபயோகிப்பாளர்கள் சங்கம் செயலாளர் கிரி தலைமையில், ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.