தமிழ்நாடு முழுவதும் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாம்கள் மூலம் இஒரே நாளில் 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி, பள்ளி அக்ரஹாரம் பகுதியில் மாபெரும் கொரானா தடுப்பு பூசி முகாம்

  நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பூசி செலுத்தும் நடமாடும் சிறப்பு வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.




அதனடிப்படையில் தமிழக அரசுமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கொரானா தொற்று நோய் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கொரோனா நோய் தடுப்பு பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 12ஆம் தேதி இன்று மாபெரும் கொரானா தடுப்பு பூசி முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்புபூசி செலுத்தும் நடமாடும் சிறப்புவாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.




தஞ்சாவூர் மாநகராட்சியில் இதுவரை 1,22,023 நபர்களுக்கு தடுப்புபூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா மூன்றாம் அலை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை 63 இடங்களில்  20,000  நபர்களுக்கு தடுப்பு பூசி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இம் முகாம்கள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகள், பள்ளிகள், நகர்புற சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்துநிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


ஒரு முகாமிற்கு 10 பணியாளர்கள் வீதம் மேற்பார்வையாளர்கள் உட்பட  650 பணியாளர்கள் இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 1328 இடங்களில் 1,20,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பு பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் தலைமையில், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்குமார், நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அனைத்து தடுப்பு பூசி மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். இதே போல் கும்பகோணம் ஏஆர்ஆர் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பூசி மையத்தில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நகர செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த தடுப்பூசி முகாமில் சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.