தேசிய சட்டப் பணிகள் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்களின் வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் ஆணைப்படி மற்றும் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சுதா அறிவுரைகளின் படி, கும்பகோணம், திருவிடைமருதூர் நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் ஒரே நாள் ஒரே நேரம் நாடுதழுவிய நேசனல் லோக் அதாலத் என்றழைக்கப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழ்மை நீதிமன்ற்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காணும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்ற அமர்வுகளில், குடும்ப நல நீதிமன்றம் கூடுதல் மாவட்ட நீதிபதி பி.இந்திராணி, முதன்மை சார்பு நீதிபதி ஜிஎன். சரவணகுமார், வழக்கறிஞர் மகாசண்முகம் ஆகியோர் கலந்து கொண்ட முதலாவது அமர்வில் சிவில் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு 41.88 லட்சம் தீர்வு காணப்பட்டது.


இரண்டாவது அமர்வில் இன்றியமைபண்டங்கள் சட்ட வழக்குகள் சிறப்ப நீதிமன்றம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி எஸ்.சண்முகவேல், மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு சார்பு நீதிபதி எஸ். அண்ணாமலை, வழக்கறிஞர் ஹெலன்ரோஸ் ஆகியோர் கொண்ட அமர்வில் சிவில் வழக்குகளுக்கு 5.17 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.




மூன்றாவது அமர்வில் இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி எ.மலர்விழி, முதண்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அனிதா கிருஷ்ணன், வழக்கறிஞர் தம்பிதுரை ஆகியோர் கொண்ட அமர்வில் குடும்ப நல வழக்குகளுக்கு 3.70 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. அனைத்து அமர்வுகளுக்கும் மொத்தம் 2679 வழக்குகளக்கு தீர்வு காணப்பட்டு, 6.57.27.203 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக பெற்று தரப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பி.சுதா மற்றும் நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர். கும்பகோணம் நீதிமன்றத்தில் இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது அதில்  முதல் அமர்வில் கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.பிரகாஷ் தலைமையில், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி எஸ். மும்தாஜ், கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றின் நீதிபதி பி.தரணிதர் மற்றும் இரண்டாவது அமர்வில் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்  டி.சண்முகப்பிரியா அவர்கள் தலைமையில், முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி வி.வெங்கடேசப்பெருமாள், வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் கே.மோகன்ராஜ் ஆகியோரது கலந்து கொண்டனர்.




அதேபோல் திருவிடைமருதூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கே.நிலவரசன் தலைமையில் கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் இரண்டின் நீதிபதி ஆர்.பாண்டி மகாராஜா, வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர் பி.லட்சுமி பங்கேற்பில் மொத்தம் 911-வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


இதில் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி சமரசமாக முடிக்க பரிசீலனைக்கு காசோலை வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாய் தகராறு வழக்குகள், சிவில், சிறு குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு  578-வழக்குகளுக்கு சட்டப்படியான உடனடி தீர்வு காணப்பட்டது. அதில் மூன்று காசோலை மோசடி வழக்கில் மூலம் 4,21,924,   42 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மூலம் 1,26,59,693 ரூபாயும் 7 கடன் வசூல் வழக்கின் மூலம் 17,02,260 ரூபாயும் 3 ஜீவனாம்ச வழக்குகள் மூலம் 20,000 ரூபாயும்,   ஒரு தொழிலாளர் வழக்குகள் மூலம் 20,000 ரூபாயும் 121-குற்றவியல் வழக்குகள் மூலம் 1,17,600 ரூபாயும் 401 சிறு குற்ற வழக்குகள் மூலம் 2,23,600 ரூபாயும்  என மொத்தம் 1,51,65,077 ரூபாய் இழப்பீடு மற்றும் தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், குணசீலன் மற்றும் நீதிமன்ற அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.