மும்பை துறைமுகத்தில் கப்பல் வெடித்து சிதறிய விபத்தில் தீயணைப்பு பணியின் போது உயிர்இழந்த வீரர்களுக்கு நாகை தீயணைப்பு நிலையத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

 


1944 ஆம் அண்டு மும்பையில் உள்ள துறைமுகத்தில் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டு Ss Fort Stikine என்ற கப்பல் வெடித்து சிதறியது. அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 66 வீரர்கள் உயிர்இழந்தனர். மேலும் 1300க்கும் மேற்ப்பட்டோர் உயிர்இழந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து இந்திய அரசு ஏப்ரல் 14ம் தேதியை நீத்தார் நினைவு தினமாக தேசிய அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  நாகை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை அலுலர்கள் மலர்வலையம் வைத்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.



 

மேலும் அரசு அறிவித்தபடி ஏப்ரல் 14 ம் தேதியை நீத்தார் நினைவு தினமாக தேசிய அளவில் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து ஒரு வார காலம் தீ விபத்து தடுக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பொதுமக்களுக்கு பல்வேறு விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, வேளாங்கண்ணி, கீவளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட 7 தீயணைப்பு நிலையத்தில் உள்ள தீயணைப்பு மீட்பு துறையினர் அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் அதிக கூட்டம் இருக்கும் இடங்களில் தீ விபத்து ஏற்படாத வகையில் மின் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் மற்றும் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்துவது பட்டாசு பாதுகாப்பாக எப்படி வெடிப்பது உள்ளிட்ட தீ விபத்து ஏற்படாமல் விபத்து வரும் முன் பாதுகாப்பாக இருப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசங்கங்களை விநியோகம் செய்யவும் பொது மக்கள் கூடும் இடம் மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இருக்கின்றனர்.