பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷத்தன்மை, இதனால் பலரும் பாம்பு கடித்து உயிரை இழக்கும் சம்பவம் காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகளில் ஒன்று. உலகம் தோன்றிய நாள் முதல் பரினாம வளர்ச்சியும் படிப்படியாக காடுகள் அழிக்கப்பட்டு மனித வாழ்விடம் அமைப்பதற்காக கட்டிடங்கள் உருவாகி காடுகளின் அளவு குறைய தொடங்கியது. இதன் காரணமாக காடுகளில் வாழ்ந்த ஜீவராசிகள் அவர்களின் வழி தடம் தேடி நகர தொடங்குகின்றன.
அவ்வாறு விலங்குகள் தங்கள் வாழ்விடத்தை இலங்கை அவர்கள் வாழ்ந்த வழி தடங்களில் செல்ல தொடங்குகின்றன அவ்வாறு அவர்கள் செல்லும் பாதைகளில் தற்போது மனிதர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள் , கட்டிடங்கள், தோட்டங்கள் என அதிகரித்ததன் விளைவாக விலங்குகளின் சீற்றத்திற்கு மனிதர்கள் ஆளாகும் சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு உதாரணமாக யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதை வாழை கரும்பு போன்ற தோட்டங்களும், வயல்களும் சேதம் படுத்தும் நிகழ்வும், இதுபோன்று புலிகள் போன்ற விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படும் நிகழ்வும் நடந்தேறும் செய்திகளை நாம் அன்றாடம் செய்தி ஊடகங்கள் வழியை அறிந்து வருகிறோம்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் 45 வயதான பாண்டியன். இவர் சிறுவயது முதலே அவ்வப்போது அவர்வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த பாம்புகளை லாவகமாக பிடித்து பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டு வருகிறார். இதுவரை 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வயல் மற்றும் தோட்டங்களில் அடைந்திருந்த விஷப்பாம்புகள் அருகில் உள்ள வீடுகளில் புகுந்து வருகிறது.
இதனை அடுத்து பாம்பு பாண்டியன் ஒரே நாளில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் வெவ்வேறு வீடுகளில் புகுந்து மக்களை அச்சுருத்தி வந்த 7 கொடிய விஷப்பாம்புகளை தனது திறைமையால் லாவகமாக பிடித்துள்ளார் பாம்பு பாண்டியன். இவைகளில் கண்ணாடி விரியன், எண்ணெய் விரியன், நல்ல பாம்பு உள்ளிட்டவை கொடிய விஷத்தன்மை கொண்டது. தொடர்ந்து பிடிபட்ட 7 பாம்புகளை மக்கள் நடமாட்டம் இல்லாத வனத்துறை காப்புகாட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது. கொடிய விஷப்பாம்புகளையும் லாவகமாக பிடித்து அப்புறப்படுத்திய பாம்பு பாண்டியனை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இதுபோன்ற வீடுகளுக்குள் புகும் பாம்புகளை வனத்துறையினர் பாம்புகளை பிடிக்க பயிற்சி பெற்ற வனக்காவலர் மூலம் பாதுகாப்பாக உயிருக்கு அச்சுறுத்தல் இன்றி அவற்றை பிடித்து வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவது வழக்கம். ஆனால் சீர்காழி வனத்துறையினர் அவ்வாறு அந்த பணிகளை செய்யாமல் பொதுமக்களை சேர்ந்த ஒருவரை அவர் உயிருக்கு எவ்விதமான பாதுகாப்பும் இன்றி சட்டத்திற்கு புறம்பாக பாம்புகளை பிடிக்க அனுமதி அளித்தது அவரை ஊக்கப்படுத்தி வருவதாகவும், இனிவரும் காலங்களிலாவது பயிற்சிபெற்ற வன காவலர் இது போன்ற கொடிய விஷத்தன்மை உள்ள பாம்புகளே பிடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.