மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திற்கு அருகில் உள்ளது கதிராமங்கலம். தஞ்சை மாவட்டத்தின் எல்லையான கதிராமங்கலத்தை சேர்ந்தவர் 82 வயதான ஓய்வுபெற்ற அரசு பாலிடெக்னிக் ஆசிரியர் குருமூர்த்தி. அரசு பணியில் இருக்கும்போதே 1964 ஆம் ஆண்டு முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேரம் மற்றும் அஞ்சல் வழி பட்ட படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளில் சேர்ந்து படித்து வருகிறார்.
NEET Exam: நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை - வெளியான மாணவி எழுதிய உருக்கமான கடிதம்..!
கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று கூறும் குருமூர்த்தி, திருமணம் செய்துகொள்ளாமல் படிப்பில் ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக தொடர்ந்து இன்றளவும் தனது முதுமையை நினைவில் கொள்ளாது உற்சாகத்துடன் பயின்று வருகிறார். இதுவரை இளங்கலை, முதுகலை, இளம் முனைவர் என பல்வேறு பாடப்பிரிவுகளில் 24 பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்ட படிப்புகளை முடித்த இவர் ஓய்வு பெற்றதற்கு பிறகு 12 பட்ட படிப்புகளையும் படித்து சாதனை படைத்துள்ளனர்.
பொன்னை ஆற்று ரயில்வே பாலம் திடீர் சேதம் - ரயில்கள் ரத்தானதால் பொதுமக்கள் அவதி
படிப்பதற்கு தான் செலவு செய்யும் தொகையை செலவாக நினைத்ததில்லை என்றும், தனது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதமாக இந்தப் படிப்புகள் அமைந்துள்ளன என்றும் தெரிவிக்கும் குருமூர்த்தி, தனது 25- வது பட்டப்படிப்பாக முதுகலை போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற பாடப்பிரிவை தேர்வு செய்து, நேற்று மயிலாடுதுறையில் புதிதாக திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து அதற்கான பாடப் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.
11ஆயிரம் காலிப்பணியிடங்களை அறிவித்த டிஎன்பிஎஸ்சி: குரூப் 1 முதல் குரூப் 4 வரை முழு விபரம் இதோ!
82 வயதில் 25 ஆவது பட்ட படிப்பிற்கு விண்ணப்பம் செய்த குருமூர்த்திக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து குருமூர்த்தி கூறுகையில், நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவை தனது படிப்புகளுக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாகவும், இளைய தலைமுறையினர் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கியிருந்தது நேரத்தை வீணடிப்பதாகவும், வாழ்க்கையை அர்த்தத்துடன் வாழ வேண்டும், வாழ்க்கையை சாதாரணமாக கடந்து செல்லக் கூடாது என்பதை எனக்கு இதுபோன்ற படிப்புகள் கற்பித்ததாகவும் 22 வயது இளைஞரைப் போல் 82 முதியவர் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்.
Kola pasi Series-8 | கோயம்புத்தூர்: கொள்ளு ரசம் முதல் கமலாத்தாள் பாட்டியின் ஒரு ரூபாய் இட்லி வரை