புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

’’காரைக்காலில் பேருந்து நிலையம் அருகே மாநில செயலாளர் தமீம் கனி தலைமையில் புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன முழக்கம்’’

Continues below advertisement
புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது  என வலியுறுத்தியும், வாக்குறுதிகளை நிறைவேற்றாத பி.ஜே.பி- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் காரைக்காலில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா காரணமாக, வேலையிழப்பு, வருமானமிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்  மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரியை ஆளும் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்து இருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அதன்பிறகு அறிவிக்கப்பட்டவை என எதையும்  நிறைவேற்றாமல் என் ஆர் காங்கிரஸ் அரசு புதுச்சேரி மக்களை ஏமாற்றி வருவதாக எஸ்டிபிஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி சிறைப்பிடிப்பு - அரிசியை சாலையில் கொட்டி போராட்டம்
 
 
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா - அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறிய திமுகவினர்

எனவே புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் விரோத  அரசாக இயங்கி வரும் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும் புதுச்சேரி மாநிலத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்காலில் பேருந்து நிலையம் அருகே மாநில செயலாளர் தமீம் கனி தலைமையில் புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக புதுச்சேரி மாநில மக்களை ஒருங்கிணைத்து புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட இருப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

Continues below advertisement

 
Continues below advertisement
Sponsored Links by Taboola