தேசிய கடல் தூய்மை தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூர் பூம்புகார் கல்லூரி விலங்கியல் ஆராய்ச்சி துறை, சீனிவாச மேல்நிலை பள்ளி மற்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், அறிவியல் பலகை விஞ்ஞானிகள் இணைந்து பழமையான சுற்றுலாதளமான பூம்புகார் கடற்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. 




பூம்புகார் சுற்றுலா மையத்தை சுற்றி மாசு அடைந்து குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கடல்நீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதை பாதுகாக்க மாணவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த காலை முதல் மாலை வரை கடற்கரையை சுற்றி கிடக்கும் குப்பைகளை எடுத்து மக்கும் குப்பை - மக்கா குப்பைகள் என தரம் பிரித்து காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூலமாக குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. காவிய நகரமான கோவலன் - கண்ணகி வாழ்ந்த புகார் நகரத்தையும் அதன் சிறப்பு மிக்க கடற்கரையும் தூய்மையாக வைத்து பாதுகாக்க பட வேண்டும் என்ற நோக்கில் மாணவர்கள் - பேராசிரியர்கள், விஞ்ஞானிகளின் பெரும் முயற்சியாக கடற்கரை முழுவதும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். 




அதனைத் தொடர்ந்து பேசிய விஞ்ஞான் பிரச்சாரின் இயக்குனர் வெங்கடேஸ்வரன் தெரிவிக்கையில், கடலுக்கு நாம் இழைக்கும் துரோகத்தை சரி செய்வதற்காக இந்த நிகழ்வை தொடங்கி இருப்பதாகவும் கடற்கரையை சுத்தமாக வைத்தால் தான் கடலை பாதுகாக்க முடியும் கடலை பாதுகாத்தால்தான் எதிர்கால வாழ்விற்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என்ற நோக்கில் இந்த தூய்மை பணியை நடத்தி வருவதாகவும் எல்லா ஆண்டும் செப்டம்பர் மூன்றாவது சனிக்கிழமை கடற்கரை தூய்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டும் அதனை கடைப்பிடிக்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் என்பதால் 75 கடற்கரையில் இந்த தூய்மை பணியை ஒரே நாளில் நடத்த இருக்கிறார்கள் எனவும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.




மாணவர்கள் 48 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் பள்ளி மாணவர்கள்: பள்ளி மேம்பாட்டுக்கு தேவையான நிதியினை வழங்குவதாக உறுதி ஏற்றனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆயங்குடிப்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்கள் பள்ளியில் தங்கள் அமர்ந்து படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். 




அதனைத் தொடர்ந்து தங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென முடிவு செய்து அதன்படி தனி வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் முன்னாள் மாணவர்களையும் ஒன்றிணைத்து பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் தற்போதைய தலைமை ஆசிரியருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாணவர் நாகராஜன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.