நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளின் 36 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள்  கோட்டை வாசல் ஊர கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. இன்று காலை நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 165 நபர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது குப்பைகளை கோட்டை வாசல்படி அருகே உள்ள குப்பை கிடங்கு எடுத்துச் சென்று அங்கு கொட்டப்பட்டது. பணியில் கும்பகோணத்தை சேர்ந்த நகராட்சி டிப்பர் வாகன ஓட்டுனர் ஜோதி மற்றும் நாகூர் அமிர்தா நகரை சேர்ந்த  ஒப்பந்த துப்புரவு பணியாளர் விஜய் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குப்பை கிடங்கு வழியாக செல்லக்கூடிய உயர் அழுத்த மின் கம்பத்தில் டிப்பர் லாரி உரசி உள்ளது. இதில் தீப்பிடித்த டிப்பர் வாகனத்தில் இருந்த தூய்மை பணியாளர் விஜய் மின்சாரம் தாக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகன ஓட்டுனர் ஜோதி மின்சாரம் தாக்கியதில் படு காயமடைந்தார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் 108 வாகனத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் வாகனத்தின் தீயை அணைத்து விஜயின் சடலத்தை மீட்டு நாகப்பட்டினம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிய ஓட்டுநர் ஜோதியை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 

 

தகவல் அறிந்த துப்புரவு பணியாளர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன்  நாகை புதிய பேருந்து நிலையம் எதிரில் மருத்துவக் கல்லூரி வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த துப்புரவு பணியாளருக்கு நீதி கேட்டும் அவரது குடும்பத்திற்கு அரசு பணி வழங்க வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் நகராட்சி வாகனங்களை பேருந்து நுழைவாயிலின் முழுவதுமாக அடைத்து வாகனங்களை நிறுத்தியதால் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  இந்த நிலையில் நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்தவருக்கு உரிய நிவாரணமும் அவர்களது குடும்பத்திற்கு அரசு பணியும் வழங்க வேண்டும் மேலும் காயமடைந்த ஓட்டுனருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் பணி நியமன ஆணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உறுதி அளித்தார். மாலைக்குள் தங்களது கோரிக்கை வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 



 



 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண