தஞ்சையில் இருந்து 2020-21 ஆம் ஆண்டில்  98 கோடி ரூபாய் மதிப்பிலான கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள என

  மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநர் செல்வநாயகி தெரிவித்துள்ளார். தஞ்சையில், உலக புகழ்பெற்ற கலைத்தட்டு, ஒவியத்தட்டு, தஞ்சாவூர் ஒவியம், நெட்டி மொம்மைகள், தஞ்சாவூர் நெட்டி மாலைகள், நடனமங்கை, தலையாட்டி பொம்மை உள்ளிட்டவைகள் இந்தியா மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் செல்கின்றது. இதற்காக பல்வேறு கைவினைப்பொருட்களுக்கு குறிசார்குறீயீடு பெறப்பட்டுள்ளது.  இத்தகைய கைவினைப்பொருட்களை  உலக சந்தை அளவில் விற்பனை மேலும் உயர்த்தவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.




தஞ்சையில்  இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்ககம் சார்பில் நடைபெற்ற குறு, சிறு தொழில்முனைவோர்கள், கைவினை கலைஞர்களுக்கான உலகச் சந்தையில் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் மண்டலத் துணை இயக்குநர் செல்வநாயகி  பேசுகையில், உயர் தரமாகவும், அழகாகவும் இருக்கும் இந்திய கைவினைப்பொருள்களுக்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கைவினை பொருள்கள் நம்முடைய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், வேளாண்மைக்கு அடுத்தபடியாக லட்சக்கணக்கான மக்களுக்கு இத்துறை வேலைவாய்ப்பை வழங்குகிறது. உள்நாட்டிலும், உலகச் சந்தையிலும் 67,000 ஏற்றுமதியாளர்களை கொண்டுள்ள இத்துறை நாடு முழுவதும் பரவியுள்ளது.


கடந்த 2019 - 20 ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, அரபு நாடுகள், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், லத்தீன் அமெரிக்க நாடுகள், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு 3.5 பில்லியன் டாலர் அளவுக்கு கைவினைப்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் தஞ்சாவூர் மாவட்ட கைவினைப் பொருள்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.




கடந்த 2020-21 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 346 கோடியில் கைவினை பொருள்களின் பங்கு 98 கோடி. தஞ்சாவூரின் ஏற்றுமதி இலக்கை மூன்று ஆண்டுகளில் 500 கோடியாக உயர்த்துமானால், அதற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும. உலக அளவில்  கைவினை பொருட்ளை விற்பனை செய்வதற்கு ஏற்றுமதியாளர்கள் முன்வரவேண்டும். அப்போது தஞ்சை கைவினைப்பொருட்களின் விற்பனை உயரும். இதற்காக மத்திய அரசு அனைத்து விதமான நடவடி்கையும் எடுத்து கைவினைப்பொருட்களை விற்பனையை உலக அளவில் செய்வதற்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும் என்றார். இக்கருத்தரங்கத்தில் மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்கக உதவி இயக்குநர் பாக்கியவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.