தஞ்சையிலிருந்து அரிசி பயணம்... சென்னையிலிருந்து தஞ்சைக்கு யூரியா வருகை

தஞ்சையிலிருந்து வேலூருக்கு அரிசி, யூரியா உரங்கள் சென்னையிலிருந்து தஞ்சைக்கும் வந்தது.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சையிலிருந்து வேலூருக்கு அரிசியும், தாளடி சாகுபடிக்கு தேவையான யூரியா உரங்கள் சென்னையிலிருந்து தஞ்சைக்கும் வந்தது.

Continues below advertisement

தஞ்சையில் இருந்து  வேலூருக்கு 1250 டன் அரிசி சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி அதிகம் நடைபெறும். இதேபோல் குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடி மேற்கொள்வர். மேலும் தாளடி சாகுபடியும், கோடையில் சில பகுதிகளில் நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்படும்.

இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1250 டன் அரிசி மூட்டைகள் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டன.


பின்னர் சரக்கு ரயிலில் 21 வேகன்களில்  1250 டன் அரிசி மூட்டைகள்  ஏற்றப்பட்டு பொதுவிநியோகத் திட்டத்திற்காக வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் சென்னையில் இருந்து சரக்கு ரயிலில் 1,460 டன் யூரியா உரம் தஞ்சை வந்தது. 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர உளுந்து, கரும்பு, வாழை, வெற்றிலை, பருத்தி, எள், மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்படும்.

இதற்கு தேவையான உரங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரவழைக்குப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சம்பா, தாளடி  சாகுபடி செய்வதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 

அதன்படி சென்னையில் இருந்து சரக்கு ரயிலின் 25 வேகன்களில் 1,460 டன் யூரியா உரம் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்நிலையில் ஆந்திராவில் இருந்து வந்த உர மூட்டைகள் தஞ்சை ரயில் நிலையத்தில் லாரிகளில் ஏற்றப்பட்டு  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள தனியார்  விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒருபுறம் அரிசி விநியோகத்திற்கும், மறுபுறம் உரங்களும் வந்து சேர்ந்தது.

Continues below advertisement