தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ரயில் பயணிகளுக்கான வசதிகள் குறித்த ஆய்வுக் குழுவின் தலைவர்

  பி.கே.கிருஷ்தாஸ் தலைமையில் ஆய்வு செய்தனர். அப்போது, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர், பயணிகளுக்கான முதலுதவி மருத்துவ மையம்,  நகரும் படிக்கட்டுகள், பிளாட்பார பயணிகளின் இருக்கைகள், மேற்கூரைகள், நிழற்குடைகள் தரமானதாகவும், பாதுகாப்பாகவும் உள்ளதா,  கண்காணிப்பு கேமராக்களின் தெளிவாக தெரிகிறது, ரயில் நிலையம் முழுவதும் உள்ளதா, தரமான சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுகிறதா, துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக  கழிவறை வசதிகள் பராமரிக்கப்படுகிறதா, கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என அனைத்து ரயில் நிலையத்தில் உள்ள பகுதிகள் முழுவதையும் நேரில் பார்வையிட்டு இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.




அப்போது அந்த குழுவின் தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸிடம், தஞ்சாவூர் - திருச்சி ரயில் பயணிகள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் வெ.ஜீவக்குமார் கோரிக்கை மனுவை வழங்கி அவர்களிடம் கூறுகையில், கொரோனா தளர்வுக்கு பின் பல பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பயணிகள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை காலை நேரத்தில் இயக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்பட்டால் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அலுவலக பணிகளுக்கு செல்வோர், பொதுமக்களுக்கு பயன் தரக்கூடியதாகும். இந்த ரயிலை உடனடியாக இயக்கப்பட வேண்டும்.  இதனால் ரயில் சென்று வந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.




அதே, போல் சாலை  போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டும், வாகனங்களின் பயன்பாட்டால் காற்று மாசுபடுவதும் அதிகரித்து வருவதால், தஞ்சாவூர்-திருச்சி இடையே ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்சார பயணிகள் ரயில் இயக்கப்பட வேண்டும்.  தினமும் வேலைக்கு சென்று வரும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் சீசன் டிக்கெட்டை அனுமதிக்க வேண்டும். ரயிலில் பெரும்பாலான ஏழைகள் சென்று வரும் நிலையில், பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டும், சில ரயில்களில் முன்பதிவு என உள்ளதால் பஸ்சில் செல்லுகின்ற நிலை உள்ளது.




கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை மீண்டும் இயக்கவதோடு, அந்த ரயில்கள் ஏற்கெனவே நிறுத்தப்பட்ட இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரும் படிக்ட்டுக்களை இயக்க வேண்டும், பிளாட்பாரம் 2,3,4 மேற்கூரை இல்லாமல் உள்ளது. குடிநீர் வசதிகள் குறைவாக உள்ளது, டிஜிட்டில் தகவல் பலகை மற்றும் கூடுதல் டிஜிட்டல் டிக்கெட் கவுண்டர்கள் வேண்டும், 20 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட சென்னை சென்ற 110 என்ற பெயர் கொண்ட ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்பதை வலியுத்தி கோரிக்கை மனுவை வழங்கினார். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட  ஆய்வுக்குழுவினர் ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர்.