தஞ்சை அருகே சிவகாமிபுரம் வழியாக வண்ணாரப்பேட்டைக்கு செல்லும் ரயில்வே கீழ்ப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தஞ்சையை அருகே சிவகாமிபுத்தில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட்டை தாண்டி தான் வண்ணாரப்பேட்டைக்கு செல்ல முடியும். ரயில் வரும் நேரங்களில் வெகு நேரம் பஸ், லாரி, பைக்குகள் என்று நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் விவசாய இடுபொருட்கள் ஏற்றிய வாகனங்களும் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது.
தொடர்ந்து இதுபோல் இப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ரயில்வே கீழ்ப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி முடிந்து கீழ்ப்பாலம் வழியாக பஸ், பைக், கார், வேன், சரக்கு வாகனங்கள் வண்ணாரப்பேட்டைக்கு சென்று வருகின்றன. தினமும் இதுபோல் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.
விவசாயிகள், தொழிலாளிகள் பைக்குகளில் இந்த பாலம் வழியாக தான் தஞ்சை உட்பட அருகில் உள்ள பல ஊர்களுக்கு செல்கின்றனர். தங்களின் வயல்களுக்கு தேவையான இடுபொருட்களையும் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்த ரயில்வே கீழ் பாலத்தில் மழை பெய்தால் அதிகளவு வடிய வழியின்றி தேங்கி நிற்கிறது.
இதனால் பஸ்கள் வண்ணாரப்பேட்டைக்கு வருவதில்லை. சிவகாமிபுரம் கீழ்ப்பாலத்தில் தண்ணீர் நிற்கிறது. செல்லமுடியாது என்று தெரிவித்து விடுகின்றனர். இந்த பஸ்சை நம்பி தஞ்சையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உள்ளனர். பஸ் வராத நிலையில் அவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். பைக்குகளிலும் கீழ்ப்பாலத்தில் செல்ல முடியாமல் போகிறது. இதனால் வல்லம் வழியாக சுற்றிக் கொண்டு செல்கின்றனர் அல்லது ஆலக்குடிக்கு வந்து ரயிலில் செல்லும் நிலை உள்ளது.
மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் தேங்குவதில்லை. கோடைகாலத்திலும் இந்த கீழ்ப்பாலத்தில் தரையில் தண்ணீர் ஊறுகிறது. இதனால் எப்போதும் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் தஞ்சைக்கு சென்று விட்டு, பணி முடிந்து பைக்கில் வருபவர்கள் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை பொதுமக்கள் கூறுகையில், சிவகாமிபுரத்தில் இப்பகுதியை சேர்ந்த பலருக்கும் வயல்கள் உள்ளது. மேலும் விவசாயத் தொழிலாளர்களும் இந்த கீழ்ப்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். மழைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் வயலுக்கு தேவையான உரம், பூச்சி மருந்துகள் போன்றவற்றை எடுத்துச் செல்ல முடிவதில்லை. மேலும் பஸ் ஊருக்குள் வராததால் பள்ளி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுகின்றனர். இது மழைக்காலத்தில் மட்டுமின்றி கோடைக்காலத்திலும் தண்ணீர் ஊறுகிறது. இதனால் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே இதற்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும். மழைநீர் தேங்காமல் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.