மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கி.பி.1620 -ஆம் ஆண்டு டென்மார்க் படைதளபதி ஓவ்கிட் என்பவரால் தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் 1978 -ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுபாட்டுக்கு மாறியது. 2002 -ல் டென்மார்க் அரசு ஒத்துழைப்புடன் டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நல சங்கம் தமிழக அரசின் தொல்லியல் துறையுடன் இனைந்து டேனிஷ் கோட்டை புதுப்பிக்கப்பட்டது.
2011 -ம் ஆண்டு தமிழக அரசால் பழமை மாறாமல் 2 -வது முறையாக புதுப்பிக்கப்பட்டது. கோட்டையில் உள்ளே பழங்கால பொருட்கள் கொண்ட அருங்காட்சியகமும் உள்ளது. டேனிஷ் காலத்தில் கோட்டைக்குள் கடல் நீர் புகாத வண்ணம் செங்கல் சுண்ணாம்பால் தடுப்பு சுவர்களை எழுப்பி இருந்தனர். அந்த சுவர் பேரிடர் காலங்களில் கடல் அரிப்பால் அடித்து செல்லப்பட்டும் மண்ணிலும் புதைந்து போனது.
இந்நிலையில், மாண்டஸ் புயல் கடல் சீற்றம் காரணமாக கோட்டை அருகே கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. மண்ணில் புதைந்திருந்த சுண்ணாம்பால் ஆன தடுப்பு சுவர் தற்போது வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. மேலும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று வைக்கபட்டிருந்த எச்சரிக்கை பலகை சேதமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பேரிடர் காலத்தில் கடல் அரிப்பால் கோட்டை பிரதான மதில் சுவரை சுற்றி அமைக்கப்பட்டிருந்த முள்வேலி தடுப்புசுவர் இடிந்து விழுந்தது.
இந்த சூழலில் தற்போது கோட்டையின் பிரதான சுற்றுசுவர் பகுதியில் தொடாந்து மண்அரிப்பு ஏற்பட்டுள்ளதால் கடல் அலைகள் கோட்டையின் பிரதான மதில் சுவரை நெருங்கியுள்ளது. உடனடியாக கோட்டையை பாதுகாக்க கருங்கற்கலால் ஆன அலைதடுப்பு சுவர் அமைத்து புகழ்வாய்ந்த பழமையான வரலாற்று சிறப்புமிக்க டேனிஸ் கோட்டையை சேதமடையாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Cyclone Mandous: மாண்டஸ் புயலால் சேதமடைந்த தரங்கம்பாடி துறைமுக தூண்டில் வளைவு
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற