தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை ஊராட்சி சிவகாமிபுரத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பழைய நீர் தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஆலக்குடி அருகே சிவகாமிபுரம் பகுதியில் பள்ளி தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டில் உள்ளது. இந்த சிவகாமிபுரம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் அடங்கும். இதிலிருந்து வழங்கப்படும் தண்ணீர்தான் இப்பகுதி மக்களுக்கு பயனாக உள்ளது. இதன் தூண்கள் சிதிலமடைந்தது. இதன் அருகிலேயே தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து இருந்ததால் புதிதாக நீர் தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது.
*
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.