மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் தேரோடும் வீதியான வடக்கு வீதி, மயிலாடுதுறை - தரங்கம்பாடி செல்லும் பிரதான சாலையில் இன்று புதிய டாஸ்மாக் கடை ரகசியமாக திறக்கப்பட்டது.  தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு  லாரி மூலம் மதுபானங்கள் வந்து இறங்கியது. இதனை கண்ட வடக்கு வீதி அருகே உள்ள இந்திரா காலனி மக்கள் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.




1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மயூரநாதர் கோயில் தேரோடும் வீதியில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைத்தால் ஐப்பசி மாதம் தினந்தோறும் நடைபெறும் சாமி வீதி உலாவிற்கு இடையூறு ஏற்படும் என்றும், மேலும், பள்ளி, கல்லூரி மற்றும் குடியிருப்புகள் அருகாமையில் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.




விரைவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் - பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  மயிலாடுதுறை காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மதுபான கடை மூடப்படும் என்ற வாக்குறுதியை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  தமிழக அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மதுபானக் கடையை திறக்க அனுமதித்த நிலையில் பிரதான சாலையில் மதுபானக் கடை திறக்கப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.




Local Body Election:சேலம் மாநகராட்சியில் 14வது வார்டு அதிமுக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு.. காரணம் என்ன?


கடந்த மாதம் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் கோயில்களுக்கு அருகாமையிலும், பள்ளி , கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் உள்ள அரசு மதுபான கடையான டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும் எனக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் மீண்டும் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மயூரநாதர் கோயில் அருகே பள்ளி கல்லூரிகள் அமைந்துள்ள இடத்தில் அரசு மதுபான கடை திறக்கப்பட்ட சம்பவம் பாஜகவினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ”கடந்த ஆட்சியில் பல்வேறு இடங்களில் அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இந்த ஆட்சியில் அது படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இவர்களும் வருவாய் நோக்கத்தோடு மாணவர்களுக்கும், மக்களுக்கும் இடையூறு தரும் இடத்தில் புதியதாக மதுபான கடைகளை திறப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது” என்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண