தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் அறிவிப்புக்கு எதிர்ப்பு இருதரப்பினரும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு காணப்பட்டது.

Continues below advertisement

தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் பதவிக்கு, தற்போதைய மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், ஒரத்தநாட்டை சேர்ந்த கர்ணன்,  உஞ்சியவிடுதி துரை, கண்ணுகுடி துரைமுருகன் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரியாக ராமசேதுபதி இருந்து தேர்தலை நடத்தினார். இதில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று மத்திய மந்திரி எல்.முருகன் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற நிர்வாகிகள் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் பெயர் அறிவிக்கப்பட்டது.

அப்போது சிலர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு, கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் மேடையை நேர்ககி வந்தனர். அப்போது ஜெய்சதீஷ் ஆதரவாளர்களும் மேடையை நோக்கி வந்தனர். இரண்டு தரப்பினரும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் சலசலப்பு காணப்பட்டது. இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தி இருக்கையில் அமர செய்தனர். பின்னர் சலசலப்பு ஓய்ந்தது.  மத்திய மந்திரி எல்.முருகன் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continues below advertisement

முறைப்படி ஒவ்வொரு பூத், மண்டலம், மாவட்டடம், மாநிலம் வாரிய தேர்தலை நடத்துகிறது. வேறு எந்த கட்சியிலும் ஜனநாயகரீதியாக கட்சி நிர்வாகி தேர்தலும் நடக்காது. பா.ஜ.,வில் உழைப்பு, நேர்மை, மக்களுக்கு சேவை செய்கின்றவர்களுக்கு ஒருநாள் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.  தி.மு.க.,வில் சாதாரணமானவர்கள் மாநில, மாவட்ட பொறுப்புகளில் போட்டியிட முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டை பிரதமர் மோடி மிகவேமாக வளர்ச்சி பாதையில் எடுத்துச்சென்றுள்ளார்.  

இப்படிபட்ட கட்சியில் நாம் எல்லாம் ஒரு உறுப்பினராக இருப்பது பெருமை, கெளரவமான விஷயம். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நமக்கு மிகப்பெரிய இலக்கு. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியன், இணை தேர்தல் அதிகாரி பஞ்சாட்சரம், மாவட்ட தேர்தல் பார்வையாளர் முரளிகணேஷ், நிர்வாகி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ.,மாநிலத்தலைவர் அண்ணாமலை, மாநிலப் பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோரின் முழு முயற்சியால், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறுத்த வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதன் பேரில், சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பா.ஜ.வுக்கு கிடைத்த வெற்றி. ஆனால், முதல்வர் ஸ்டாலின் மேலுார் பகுதிக்கு சென்று ஒரு நாடகத்தை அரங்கேற்றி வந்துள்ளார். இது நாடகம் எல்லாம் செல்லாது.

2017ம் ஆண்டில் இருந்து டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஆய்வுகள் நடந்து வந்தது. 2021ம் ஆண்டில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு தி.மு.க., அரசு வேண்டாம் என தெரிவிக்கவில்லை. மக்களின் எதிர்ப்புக்கு பிறகு, தி.மு.க., வேண்டுமென்று அரசியல் நோக்கத்திற்காக, டங்ஸ்டன் சுரங்கம் தங்களால் தான் நிறுத்தப்பட்டுள்ளதாக போலியான பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். முதல்வர் தவறான தகவலை கூறி வருகிறார். 

வக்பு வாரிய சட்டத் திருத்தம் வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். இதற்காக ராஜய்சபா, லோக்சபா உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை தொடர்பாக கூட்டம் நடந்து வருகிறது. பொதுசிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் படிபடியாக கொண்டுவரப்படும். 

தி.மு.க., ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது பகல் கனவாக தான் முடியும். கடந்த தேர்தலில் சொற்ப ஓட்டுகளில் தான் வெற்றிப்பெற்றார்கள். தற்போது மக்களின் தலையில் மின்கட்டணம், சொத்துவரி என சுமையாக கொண்டு வந்துள்ளனர். மக்களின் வருமானத்தை சுரண்டக்கூடிய அரசாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா, டாஸ்மாக் என அதிகரித்துள்ளது. மக்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிக பெரிய தோல்வியை தி.மு.க., சந்திக்கும். 

ஈ.வே.ரா.,குறித்து மக்கள் கருத்தே எனது கருத்து. கவர்னர் மீது தமிழக அரசுக்கு மிகப்பெரிய காழ்ப்புணர்வு இருக்கிறது. கவர்னர் எது கூறினாலும், நாங்கள் கேட்கமாட்டோம் என்ற மனநிலையில் தான் தி.மு.க.,உள்ளது. தி.மு.க., அரசும், அமைச்சர்களும் கவர்னர் மீது தனிப்பட்ட தாக்குதலையும் வன்மத்தையும் கொண்டு பேசி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.