மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த சுகந்தன், கலைமாறன், சந்தோஷ், பிரதிப்குமார், பார்த்திபன் உள்ளிட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களை கருணைக் கொலை செய்துவிடுமாறு கூறி கையில் பதாகைகளை ஏந்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டம் நடக்கும் கூட்ட அரங்கின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.




தமிழணங்கில் எதுக்கு 'ஸ'? கரங்களுக்குள் கூர்வாள் - அண்ணாமலையை அட்டாக் செய்த தங்கம் தென்னரசு!


இது குறித்து அவர்கள் கூறுகையில், ”பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக இரு தரப்பினர் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர். இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் இறந்ததால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஆனால், பிரச்னை நடந்து 15 நாட்களுக்குப் பிறகு தமிழ்வாணன் கொரோனா தொற்றால் இறந்துள்ளார். 




Untold Stories Episode 13 : வாழ்வை முடக்கிய விபத்து..! துப்பாக்கித் தந்த புதுவாழ்வு..! அக்னிப்பறவையாய் மாறிய அவனிலேகரா..!


ஆனால், தங்களை பழிவாங்கும் நோக்குடன் கொலை வழக்கு போடப்பட்டதால், சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளதாகவும், இந்நிலையில், பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, மீனவ கிராமத்தில் உள்ள நபர்கள் யாரும் தங்களிடம் பேசக்கூடாது என்றும், 40 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் தங்களை ஊரை விட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர். 




நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களில் நீதிமன்றங்கள், அலுவலகங்கள் செயல்படலமா? - பாலகிருஷ்ணன் கேள்வி


இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதோடு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையில் பலமுறை மனு அளித்ததாகவும். இருப்பினும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்த மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து, மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அவர்களை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.