காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரை நம்பி பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் இந்த ஆண்டு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட மறுத்துள்ள காரணத்தினால் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கர்நாடக அரசு உரிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டம்
அந்த வகையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக திருவாரூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலை திருவாரூர் ரயில் நிலையத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரி நீர் பிரச்சினையில் நடந்து கொள்ள வேண்டும்
காவல்துறையால் கைது செய்யப்பட்ட போராட்ட காரர்கள்
மேலும் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விட மத்திய அரசு அறிவுறுத்திட வேண்டும் மேலும் தமிழக அரசு அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களை உடனடியாக கூட்டி அனைவரது ஆலோசனைகளையும் கேட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி தினம்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
மன்னார்குடியிலும் ரயிலை மறித்து போராட்டம்
இதேபோன்று இன்று காலை மன்னார்குடி ரயில் நிலையத்தில் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர் இதே போன்று திருத்துறைப்பூண்டியில் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் ரயிலை மறைத்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது