தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி புனித மரியன்னை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் விரிவுப்படுத்தப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது.
விரிவுப்படுத்தப்பட்ட முதல்வரின் காலை உணவு திட்டம்
ஊரகப் பகுதிகள் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளில் விரிவுப்படுத்தப்பட்ட முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை திருவள்ளுவர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி புனித மரியன்னை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு, டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர் ), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை தொடக்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது: முதல்வர் ஊரகப் பகுதிகள் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை திருவள்ளுவர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டி புனித மரியன்னை அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்க விழா நடந்தது.
10,870 மாணவ,மாணவிகள் பயன் பெறுகின்றனர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் ஊராட்சியில் 13 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 835 மாணவ-மாணவிகளும், திருவையாறு ஊராட்சியில் 17 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1354 மாணவிகளும், பூதலூர் ஊராட்சியில் 13 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 853 மாணவ-மாணவிகளும், ஒரத்தநாடு ஊராட்சியில் 1 அரசு உதவிப் பெறும் பள்ளியில் 84 மாணவ-மாணவிகளும், திருவோணம் ஊராட்சியில் 1 அரசு உதவிப் பெறும் பள்ளியில் 280 மாணவ-மாணவிகளும், கும்பகோணம் ஊராட்சியில் 21 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1696 மாணவ-மாணவிகளும், திருவிடைமருதூர் ஊராட்சியில் 21 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1570 மாணவ-மாணவிகளும், திருப்பனந்தாள் ஊராட்சியில் 23 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1797 மாணவ- மாணவிகள்.
பாபநாசம் ஊராட்சியில் 14 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1382 மாணவ-மாணவிகளும், அம்மாபேட்டை ஊராட்சியில் 9 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 509, பட்டுக்கோட்டை ஊராட்சியில் 4 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 294, மதுக்கூர் ஊராட்சியில் 1 அரசு உதவிப் பெறும் பள்ளியில் 74, பேராவூரணி ஊராட்சியில் 3 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 142 மாணவ-மாணவிகள் என மொத்தம் தஞ்சாவூர் ஊரகப் பகுதிகளில் 141 அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளிகளில் 10,870 மாணவ,மாணவிகள் முதல்வரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாந்தி , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வேலு, தஞ்சாவூர் ஒன்றியக் குழுத் தலைவர் வைஜெயந்திமாலா கேசவன், ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் அருளானந்தசாமி, சதய விழாக் குழுத்தலைவர் செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.