தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு

  தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் 65 வது ஆண்டு   அமைப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க திட்டத் தலைவர் ஏ.முபாரக்பாட்சா தலைமை வகித்தார்.  65வது ஆண்டு அமைப்பு நாள் கொடியினை ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் ஏற்றி வைத்தார். தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் பொன்.தங்கவேல் சிறப்புரையாற்றினார். வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், அரசு போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மின்சார சம்மேளன நிர்வாகிகள் வி.ஞானசேகரன், கே.நாகராஜன் , பி.சுயம்பு,எம். பாஸ்கர், செல்வநாயகம்,வி. வரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இறுதியில் நிர்வாகி எம்செல்லகுமார் நன்றி கூறினார்.




இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிகின்ற ஊழியர்கள் அனைவருக்கும்         1.12 2019  முதல் ஊதிய உயர்வு பேசி அமல்படுத்தப்பட்டிற்க  வேண்டும், ஆனால் இதுநாள் வரை ஊதிய உயர்வு பேசப்படாமல் கிடப்பில் உள்ளது. உடனடியாக ஊதிய உயர்வுபேச்சு வார்த்தை பேசிமுடித்து சம்பள உயர்வு ஏற்படுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூபாய் 380 வழங்கிட வேண்டும், அவர்களை படிப்படியாக நிரந்தரம் செய்யப்படவேண்டும், மின் வாரியத்தில் காலியாக உள்ள 55 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பிடத் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்,மின்சார  ஊழியர்களின் வேலை பளுவை குறைக்க வேண்டும், புதிதாக தொடங்கப்பட்ட துணை மின் நிலையங்களுக்கு, போதுமான ஊழியர்களை நியமித்து, புதிய பதவிகளை உடனடியாக அளித்து, அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்களின் பயிற்சிக் காலத்தை குறைக்க வேண்டும்.




அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்திட வேண்டும், பணியின் போது இறப்பவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், மழை காலங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான கோட் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். மின்சார ஊழியர்களுக்கு புதிய நவீன முறையில் இயந்திரங்களை போதுமான பயிற்சியளித்து வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கொண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அனைத்து சங்க மின்சார ஊழியர்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்துள்ளனர்.