புகையிலை ஒரு வேளாண்மை உற்பத்திப் பொருள். இதனைப் புகைத்தலுக்கு அல்லது புகையிலை பிடித்தலுக்குப் பயன்படுத்துவதனால் இது புகையிலை என்னும் காரணப்பெயரைப் பெற்றது. இதனைப் புகைத்துப் பழக்கப்பட்டவர்கள் அப் பழக்கத்துக்கே அடிமையாகி விடுவர். புகையிலை, நிக்கொட்டீனா என்னும் பேரினத்தைச் சேர்ந்த தாவரத்தின் இலைகளிலிருந்து செய்யப்படுகின்றது. பொழுதுபோக்குத் தேவைகளுக்கான ஒரு பொருளாகவும் பிரபலமானது. இதனைப் பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக் கேடு குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். புகைத்தல் காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது.


2008ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு புகையிலை இறப்பின் எளிய வழியாகச் தெரிவித்தது. மேலும் இதனை நுகர உலர வைத்து பொடியாக்கிய புகையிலையை நன்கு துகள்களாக்கி இலையினுள் வைத்து சுருட்டுவதால் புகையிலைச் சுருட்டு எனவும் தமிழில் வழங்கப்படுகிறது.புகையிலையை நுகர்ந்தவுடன் அது நிக்கோட்டின் மூலக்கூறாக இரத்த ஓட்டத்தில் கலந்து 10-20 நொடிகளில் மூளையை அடைகிறது. இப்போதை சில நொடிகளே மதிமயக்கச் செய்து அதனை நுகரத் தூண்டுகிறது.ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூரில் புகையிலை மையத் தலைமையகம் உள்ளது. இந்தியாவில் சுமார் 96,865 அங்கீகரிக்கப் பட்ட விவசாயிகள் இத்தொழிலை செய்து வருகின்றனர். மேலும் பலர் அனுமதியின்றி சாகுபடி செய்கின்றனர்.




உலக அளவில் தவிர்க்கக் கூடிய மரணங்கள் நிகழ்வதற்கு புகையிலை ஒரு முன்னணிக் காரணியாக விளங்குகிறது. ஒரு சிகரட் புகைக்கப்படும் போது தோராயமாக ஒருவர் தன் ஆயுட்காலத்தின் 11 நிமிடங்களை இழக்கின்றார். ஒவ்வொரு 6 நொடிப்பொழுதிலும் உலகில் ஒரு உயிரழப்பு புகையிலையால் ஏற்படுகிறது. ஒருவருடத்திற்கு சுமார் 5 மில்லியன் மக்கள் புகையிலை சார்ந்த நோயால் மடிகின்றனர்.  புகையிலைப் பயன்பாடால் நுரையீரல் புற்றுநோய், குரல்வளை, கழுத்து புற்றுநோய், இரத்த, இரத்தக்குழாய் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், வாய், உணவுக்குழாய் புற்றுநோய், கணையப்புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டஉறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்.


மேலும், இதய நாள நோய் - ரத்த அழுத்தம் அதிகரிப்பு, இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்தக் குழாய்களின் தன்மை கடினமடைகிறது. வாய், முகர்தல், சுவைக் கோளாறு - வாயில் ஈறுகள் நிறமாறத்திற்குக் காரணமாகிறது. சுவை, நுகரும் திறனைக் குறைக்கிறது. புகையினால் வாய்ப்புண்களை ஏற்படுத்துகிறது. பக்கவாதம்,மனநோய்கள் - புகைத்தல் மூளையை பாதித்து பக்கவாதம் வரக் காரணமாகிறது. சிறுநீரக நோய், நோய்த்தொற்று, ஆண்மைக்குறைபாடு, பெண் கருவுறாமை, கர்ப்ப பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் உடலில் ஏற்படுகிறது.


புகையிலை சார்ந்த கழிவுகள் சுமார் 7000ற்கும் மேற்பட்ட நச்சு வேதிப்பொருட்களையும், மனித புற்று நோய் காரணிகளையும் சுற்றுச்சூழலில் பரப்பி, அதனை மாசுபடுத்துகின்றன, புகையிலையிலிருந்து வெளியேறும் புகை நச்சு சுமார் 1000 டன்கள் மனித புற்று நோய்க்காரணிகளை வளிமண்டலத்தில் பரப்புகின்றன. தினமும் விற்பனையாகும் 15 பில்லியன் சிகரட்டுகளில் சுமார் 10 பில்லியன் சிகரட் கழிவுகள் சுற்றுச்சூழலில் பரப்பப்படுகின்றன என 2017 ல் உலக சுகாதார நிறுவனம் புகையிலையும் அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.




புகையிலையின் தீங்கு, பக்க விளைவுகளைக் கருத்தில் கொண்டு புகையிலையின் விளம்பரங்கள் மற்றும் சந்தைபடுத்டுதலில் பல்வேறு கட்டுப்படுகள் மற்றும் தடைகள் உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப் படுகிறது. இந்தியாவில் புகையிலை வஸ்துகளில் புகையிலையின் அபாயம் பற்றிய படங்கள் இடம் பெற வேண்டும். பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது. திரைப்படங்களில் புகைப்பிடித்தல் பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் தலையங்கம், இடைவேளை, இறுதி போன்றவற்றில் இடம்பெறச் செய்தல் வேண்டும்.


திரைப்படங்களில் புகைப்பிடித்தல் காட்சிகள் வரும்போது புகைப்பிடித்தல் கேடு தரும் உள்ளிட்ட வாசகங்கள் ஆன்கிலம் மற்றும் மாநில மொழிகளில் இடம் பெறல் வேண்டும் உள்ளிட்டவைகள் மூலம் சுகாதாரத்துறை அமைப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யக்கூடாது என உத்தரவு உள்ளது.


இந்நிலையில் தஞ்சாவூர் வடக்கு வீதியிலிருந்து நாலுகால் மண்டபத்துக்குச் செல்லும் வழியிலுள்ள கட்டிடத்தில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினருக்குப் புகார் வந்தது. இதன் பேரில் மேற்கு காவல் நிலையத்தினர், தகவல் கிடைத்த பகுதிக்கு சென்று அங்குள்ள கட்டிடத்தில் சோதனையிட்டனர். இதில், புகையிலைப் பொருள்கள் மூட்டைகளிலும், கடைகளுக்கு அனுப்புவதற்கு ஏற்ப பாக்கெட்டுகளில் நிரப்பியும் இருப்பது தெரிய வந்தது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினர் கைப்பற்றினர். போலீசார் வருவதையறிந்த அங்கிருந்தவர்கள் தப்பியோடிவிட்டதால், இச்செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.