தஞ்சை மாநகராட்சி, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலீவர் தொடங்கி வைத்து பேசுகையில், இந்தியாவில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. ஒரே நாளில் நாட்டில் உள்ள அனைத்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயைபரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு, இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச் சூழலில் இருந்து ஒழிக்கப்படுகிறது. தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக 2004 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்த குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த சொட்டு மருந்து முகாமினை சிறப்பாக நடத்துவது குறித்து நமது மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கடந்த 21 ந்தேதி நடைபெற்றது. நமது மாவட்டத்தில் சுமார; 2,38,449 ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2,20,650 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. நகரப்பகுதிகளில் 128 மையங்களும்,ஊரகப் பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், கோயில்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இம்முகாம்களில் 6040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும், 178 மேற்பார;வையாளர;களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்;.மேலும் சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது. போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் கொரோனா தொற்று நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின் பற்றி நடைபெற்று வருகிறது. சமூக இடைவெளிகடை பிடித்தல், முகக் கவசம் அணிதல் மற்றும் தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கைகளை கழுவுவதற்கு கிருமி நாசினி உபயோகப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கலாம். எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்தை தவறாமல் போட்டுக்கொண்டு போலியோ நோயிலிருந்து தங்களது குழந்தைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.துரைசந்திரசேகரன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரவிக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ரமேஷ்குமார், நகர் நல அலுவலர் மருத்துவர் நமச்சிவாயம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.