நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின்பேரில் வேதாரண்யம் காவல் ஆய்வாளர் சுப்ரியா, உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கஞ்சா கடத்தல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 6 மணிக்கு வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கடைத்தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை காவல் துறையினர் சோதனையிட்டனர். அவர்களிடம் 2 கிலோ கீட்டமைன் எனும் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 8 லட்சம் ரூபாயாகும்.
கீட்டமைன் என்பது மருத்துவமனைகளில் அறுவை அரங்கில் நோயாளிகளை மயக்கமடையச் செய்து அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் மயக்க மருந்துகளில் கீட்டைமனும் ஒன்று. இதை சிலர் போதைக்காகவும் பயன்படுத்துகின்றனர். இந்த போதைப் பொருள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக தெரியவந்தது. கீட்டமைன் போதை பொருளை கடத்திய சிவகுமார், திராவிடமணி, செல்வராசு ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். வெளி மாநிலங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களை கடந்து எடுத்துவரும் போதை பொருட்களை காவல் துறையினரின் சோதனைக்கு உட்படுத்தி அந்தந்த மாவட்டங்களிலேயே பறிமுதல் செய்து கைது செய்திருக்கலாம், நெடுந்தூர பயணத்திற்குப் பிறகு காவல்துறையின் கண்ணில் மண்ணை தூவி கடத்தல்காரர்களால் கடத்தி வரப்பட்டதா? அல்லது காவல்துறையின் ஒத்துழைப்போடு கடத்தல் நடைபெறுகிறதா? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நாகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடையே விளையாட்டு போட்டி - ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
நாகை மாவட்டம் தெத்தி ஊராட்சியில் அமைந்துள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியின் நிறுவனர் நினைவாக ஆண்டுதோறும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 11 ம் தேதி முதல் சதுரங்கம், இறகு பந்து, வாலிபால், கபடி, உள்ளிட்ட 8 வகையான போட்டிகள் 11 நாட்களாக நடைபெற்று வந்தது.
இப்போட்டியில் தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம், கடலூர் காரைக்கால், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இறுதி போட்டியாக கபடி போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும்,பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை கைப்பற்றிய விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதி மணி அம்மாள் ஏற்பாட்டில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் இடையே விளையாட்டு மீது ஆர்வம் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் விளையாட்டு போட்டியை விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரின் வரவேற்பு பெற்றுள்ளது.