ஊராட்சி ஒன்றிய ஆணையர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டத் தீர்வையை  ரத்து செய்யக்கோரி, திருவாரூர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்  சங்கத்தினர் 72 மணிநேர உள்ளிருப்பு போராட்டத்தை நேற்று காலை தொடங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியை புறக்கனித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுலகங்களில் நடைபெற்ற தணிக்கையின்போது, வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் இரண்டு பேருக்கும், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஒருவருக்கும் தலா   2 லட்சம் தண்டத் தீர்வை விதிக்கப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 72 மணிநேர உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.




ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிகள் ஏதும் செய்யாமல் அலுவலகத்தில் உள்ளனர். ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மீது உள்நோக்கத்துடன் இத்தகைய தண்டத் தீர்வை சுமத்தப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக 72 மணிநேர உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ரத்து செய்யும் வரை போராட்டம் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். இந்தப் போராட்டத்தில், மாவட்டம் முழுவதும்  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 900   உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர் என ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.


மேலும் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பல மாதங்கள் கடந்தும் தடையின்மைச் சான்று வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டியும், 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி தோல்வி விபரங்களை தவறாக மாற்றி அறிவித்து மாவட்டத்தின் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக அரசு தொகுப்பு வீடுகள் கணக்கெடுக்கும் பணி 100 நாள் வேலை திட்ட பணி அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் உள்ளிட்ட பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளனர் உடனடியாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மேலுள்ள உள்ளிருப்பு போராட்டம் குறித்து திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க தலைவர் வசந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தணிக்கை துறை உதவி இயக்குனர் எந்த தவறும் செய்யாத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது ரூபாய் 2 லட்சம் தண்டத்தொகை விழித்திருப்பது என்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இந்த தண்டத்தொகை காண காரணமாக அவர்கள் தேவையில்லாத பத்திகளை காரணம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது.  இந்த தண்டத் உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது எனவும், இதுதொடர்பாக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச வேண்டும். இந்த தண்டத் தீர்வை நோட்டீசை திரும்ப பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.