தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த, கோயிலுக்கு எதிர்புறம், கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான கட்டண பார்க்கிங் உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் பெரிய கோயிலுக்கு வரும் வாகனங்கள், பார்கிங்கில் நிறுத்த இடம் இல்லாத போது, அருகில் உள்ள போலீஸாருக்கு சொந்தமான திடலில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவது வழக்கம். இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணங்கள் கிடையாது. இந்நிலையில், கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா வாகனங்கள் அருகில் இருந்த, போலீஸ் திடலில் பலரும் வாகனங்களை நிறுத்தி சென்றனர்.

  அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநரான பொன்னிவளவன்,  வாகனங்கள் நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா நுாறு ரூபாய் கட்டாய வசூல் செய்துள்ளார். சந்தேகமடைந்த ஓட்டுநர்கள் விசாரித்த போது, போலீஸார் தான் வசூல் செய்ய சொன்னதாக கூறியுள்ளார்.



இதையடுத்து அங்கிருந்தவர்கள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் தகவல் அளித்தனர். அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பொன்னிவளவனை பிடித்து விசாரித்த போது, போலீஸார் பெயரில், மோசடி வசூலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்ய போது, அவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருவதும், போதிய வருமானம் இல்லாததால், இதுபோன்று வசூல் செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து ஆட்டோவையும், பொன்னி வளவனையும் தஞ்சாவூர் மேற்கு போலீசில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து பொன்னிவளவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,தஞ்சை பெரியகோயிலுக்கு நாளுக்கு நாள் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெளி மாநில, மாவட்டத்தே சேர்ந்தவர்கள், தாங்கள் வரும் வாகனத்தை, கோயிலின் எதிர்புறம் பார்க்கிங் நிரம்பி விடுவதால், போலீசார் அலுவலக வாயிலில் உள்ள திடலில் நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாததால், இதனையறிந்த ஆட்டோ ஒட்டுனர், கடந்த சில நாட்களாக, குடிப்பதற்கு பணம் தேவைப்பட்டால், உடனடியாக போலீசார் மாமூல் வாங்க சொல்லியுள்ளார்கள், கட்டாயம் கொடுக்க வேண்டும் என மிரட்டி வாங்கி வந்தார். வெளி மாநில, மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பயந்து கொண்டு, கேட்கும் பணத்தை கொடுத்து விடுகிறார்கள்.




இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்கு, போலீசார் அப்பகுதியில், கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும், இதனை மீறி வசூல் செய்பவர்களை, காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கவும் என செல்போன் எண்களை அச்சிட்டு பிளக்ஸ் தட்டி வைக்க வேண்டும்.“டிஐஜி அலுவலகத்திற்கு அருகில் போலீசார் வசூல் செய்ய சொன்றார்கள் என்ற பெயரில் பக்தர்களின் வசூல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.