நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு வருகை தந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் முரசொலி மாறன் மற்றும் முத்துவேலர் அஞ்சுகம் அம்மையார் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற திருக்குவளை தியாகராஜர் கோயில், எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோயில்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் கும்பாபிஷேக விழாவுக்காக எட்டுக்குடி முருகன் கோவிலில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த  அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர் குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவில் குளம் மற்றும் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேர் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் வழிபாட்டிற்காக வருவதற்கான பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க அங்கு அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.



 

மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான அதன் அமைப்பு இடங்கள் வருமானம் மற்றும் செலுத்தவேண்டிய வரி வாடகை தொகையினை மீட்டெடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது திருக்கோவிலில் உள்ள கோவில்களில் பராமரிக்கப்படாமல் உள்ள நந்தவனம் குளம் நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டு குலத்தினை சுத்தப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்கும் நந்தவனத்தை மேம்படுத்தி பூந்தோட்டம் அமைத்து அழகிய தோற்றத்தோடு மக்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் சேகர்பாபு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் கூறிய அமைச்சர் சேகர் பாபு, ஒன்றிய அரசின் கொரோனா விதிமுறைகளையே கோவில்களில் தமிழக அரசு பின்பற்றி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்ற நிலை வந்தபின்பு ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து ஆலயங்களின் திருவிழாக்களும் நடத்தப்படும். 

 



 

கடந்த ஆட்சி போல அரசியல் நெருக்கடிகள் இல்லாத இந்த ஆட்சியில், திருக்குவளை தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் காணாமல் போன மரகத லிங்கம் அறநிலையத்துறையின் சிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஓதுவார், அர்ச்சகர், தேவாரம் திருவாசகம் பயிற்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் நிகழ்ச்சியை  முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் எனவும் மேலும். கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் மூத்த அரசியல் தலைவரான கலைஞரின் வாழ்க்கை வரலாற்று கண்காட்சியகம்  அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் நாகை  மாவட்ட திமுக பொறுப்பாளருமான கௌதமன் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, பூண்டி கலைவாணன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜன் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.