தஞ்சாவூர்: பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் பல்வேறு தடை கற்களை தாண்டி போரிட்டு தங்களை நிரூபித்து வருகின்றனர். இதனால் அவர்களும் போர் வீரர்களுக்கு சமம்தான் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கில் மூன்று நாட்கள் நடக்கும் அகில இந்திய பாரா வாலிபால் போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாரா ஒலிம்பிக் என்பது போர் களத்தில் காயமடையும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. 1956ம் பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது. 1958-ம் ஆண்டு உலகளவில் இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 75 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அனைவரும், சமூகத்தில் பல்வேறு தடை கற்களை தாண்டி போரிட்டு தங்களை நிரூபித்துக்கொண்டு இருப்பதால், அவர்களும் போர் வீரர்களுக்கு சமம்தான்.
பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களும் போர் வீரர்கள்தான் - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
என்.நாகராஜன் | 03 Feb 2023 05:56 PM (IST)
உலகளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டகளில் நம் நாட்டை சேர்ந்தவர்களும், தமிழகத்தில் இருந்தும் அதிக பேர் கலந்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
தரையில் அமர்ந்து பாரா வாலிபால் வீரர்களுடன் விளையாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்
Published at: 03 Feb 2023 05:56 PM (IST)