தஞ்சாவூர்: டெல்லியில் இருக்கக்கூடிய பிக்பாஸ்க்கு பழனிச்சாமி ஆமா சாமி போட்டு தான் ஆக வேண்டும். ஆனால் அதையும் தாண்டி இன்றைக்கு இன்னொரு காமெடி பண்ணியிருக்கிறார்கள் அதுதான் உண்மை என்று திருச்சியில் நடந்த எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

Continues below advertisement

2021 நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த திருவரங்கம் தொகுதியில் வேட்பாளராக நின்று போட்டியிட்டு இருவது ஆண்டுகளுக்கு கழித்து கழகத்தின் கோட்டை ஆக்கி இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு ஏற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார் பழனியாண்டி. அவர் நன்றியுரையாற்றும் போது குறிப்பிட்டு சொன்னார் அவருடைய திருமணத்தை 1993ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தான் நடத்தி வைத்திருக்கிறார்கள்.

அதேபோல் 2010 ஆம் ஆண்டு நான் துணை முதல்வராக பொறுப்பேற்ற போது அவரது சகோதரருக்கு என்னுடைய தலைமையில் திருமணம் நடந்தது அதற்கு பின்னால் 2021ல் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மூத்த மகன் திருமணத்தை நான் தான் நடத்தி வைத்திருந்தேன். இப்போது அவரது இளைய மகன் திருமணத்தையும் நான் தான் நடத்தி வைத்துள்ளேன்.  இப்படியான சகோதர பாச உணர்வோடு தான் 74 ஆண்டு காலமாக இந்த இயக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்களும் கலைஞர் அவர்களும் அவருக்கு பின்னால் அவர்களின் வழியில் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்.

Continues below advertisement

நீங்கள் ஒன்றை கூர்ந்து கவனிக்கலாம் எப்பொழுது திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் கழகம் என்று கூறுவது கிடையாது இயக்கம் என்றுதான் கூறுவார்கள். நமக்கு ஓய்வே இல்லை என்பதுதான் இயக்கம். இந்த 74 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தேர்தல் சமயமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்பொழுதும் நமது இயக்கம் நின்றது கிடையாது. சின்ன சின்ன தடைகளை கண்டு தேங்கி நின்று விட்டால் அது தேக்கம். அது இயங்கிக் கொண்டே இருந்தால் அது இயக்கம். நம்முடைய கட்சி இன்றைக்கும் சீர் இளமையோடு கம்பீரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சில மாதங்களாக  நான் அறிவாலயத்தில் இருந்து கொண்டு உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய நிர்வாகி எல்லாம் அழைத்து தனித்தனியாக தொகுதி வாரியாக நேர்காணல் நடத்தி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். அப்படி ஆய்வு செய்யும் போது வெளிப்படுத்தக்கூடிய மகிழ்ச்சியை நம்பிக்கையை நான் தெம்பாக பணியாற்ற எனக்கு ஊக்கமாக வந்து கொண்டிருக்கிறது. இதுவரை 80 தொகுதிகளை முடித்துள்ளேன். விரைவில் 234 தொகுதியையும் முடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

எஸ்ஐஆர்க்கு எதிராக நாளைய தினம் நடத்த இருக்கக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம். இதைப் பற்றி எடுத்துச் சொல்வதற்காக மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசினேன் அதை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சி சார்பாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறேன் எஸ்ஐஆர் என்றால் என்ன? அது எந்த அளவிற்கு மக்களிடத்தில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதை எப்படி நாம் முறையாக பயன்படுத்திட வேண்டும் அதை என்ன காரணத்தினால் கொண்டு வந்திருக்கிறார்கள். எனவே அது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறேன். அதை எல்லாம் முடித்துவிட்டு மாலையில் விமானத்தை பிடித்து திருச்சிக்கு வந்து இறங்கி அதற்கு பிறகு இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை முடித்துவிட்டு புதுக்கோட்டைக்கு போகப் போகிறேன். ஆகவே இப்படி இயங்கி கொண்டிருப்பது தான் எனக்கு பிடிக்கும் அதனால இது இயக்கம் என்று சொல்லுகிறோம்.

நிற்க நேரமில்லாமல் நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.. நான் மட்டுமல்ல. இயக்கத்தில் இருக்கக்கூடிய முன்னோடிகள் செயல்வீரர்கள் பம்பரமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் காட்சிகள் எல்லாம் நான் தொடர்ந்து பார்க்கிறேன். எதிரிகளாக இருக்கக்கூடியவர்கள் புதுப்புது யுக்தியோடு நம்மளை தாக்குவதற்கு நம்மளை அழிக்க  புது புது முயற்சி எல்லாம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வருமான வரி துறையை ஏவி விட்டார்கள். அதற்குப் பிறகு சிபிஐ. இப்பொழுது எஸ்ஐஆர் என்று சொல்லக்கூடிய ஆயுதத்தை எடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தை இது மூலமாக தான் அழிக்க முடியும் ஒழிக்க முடியும் என்று முடிவு செய்து எடுத்து இருக்கிறார்கள். இது வேண்டுமென்றால் வேறு மாநிலங்களில் எடுபடலாம் உறுதியாக சொல்கிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தை பொருத்தவரை தமிழ்நாட்டில் ஒரு காலம் அது எடுபடாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

எஸ்ஐஆர் குறித்து நாம் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளோம். நேற்று திடீரென்று அதிமுக அணி சார்பில் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று திராவிட முன்னேற்ற கழகம் போட்டுள்ள வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று திடீரென்று போய் மனுதாக்கல் செய்திருக்கிறார்கள். நான் கேட்கிறேன் உங்களுக்கு உள்ளபடியே அதில் அக்கறை இருக்கும் என்றால் உங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே வழக்கு போட்டிருக்க வேண்டும் ஆனால் திடீரென்று போடுவதற்கு என்ன காரணம் இதை யோசித்துப் பார்க்க வேண்டும்.. அந்த எஸ் ஐ ஆர் அவர்கள் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று பிஜேபியும் அல்லது தேர்தல் ஆணையமோ எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள் தவிர, இன்றைக்கு ஒரு அடிமையாக இருந்து கொண்டிருக்கிறார்களே தவிர அவர்கள் அதை எதிர்ப்பதற்கு துணிச்சல் இல்லை.

இருப்பினும் நாம் தொடுத்திருக்கக்கடிய வழக்கில் இன்று இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒரு கபட ஆணையத்தை நடத்துவதற்காக திட்டமிட்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல பிஎல்ஓ என்பது அங்கு உள்ள அரசு ஊழியர்களை வைத்துக் கொண்டு அந்த பணியை செய்வது பிஎல்ஏ 2 என்பது  கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகள் மூலமாக பணியை செய்வது. 

அவர்கள் அந்த பணிக்கு துணை நிற்பார்கள் உதவி செய்வார்கள். இதுதான் பி எல் ஏ 2 உடைய வேலை. அதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முறையாக நாம் போட்டு பி எல் எ 2 போட்டு அதற்கு பயிற்சி கொடுத்து என்னென்ன பணிகளை எல்லாம் எப்படி எல்லாம் செய்ய வேண்டும் முறையாக பயிற்சி கொடுத்து அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படி நியமிக்கப்பட்டிருக்க கூடியவர்கள் தவறு என்று சொல்லி அதை நீக்க வேண்டும் அதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அதிமுகவின் சார்பிலே இன்று நீதிமன்றத்தில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

டெல்லியில் இருக்கக்கூடிய பிக்பாஸ்க்கு பழனிச்சாமி ஆமா சாமி போட்டு தான் ஆக வேண்டும். ஆனால் அதையும் தாண்டி இன்றைக்கு இன்னொரு காமெடி பண்ணியிருக்கிறார்கள் அதுதான் உண்மை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் எம்எல்ஏ பழனியாண்டி தேர்தல் நிதியாக ரூ.50 லட்சத்தை நிதியாக இங்கு தந்து இருக்கிறார். தேர்தல் நிதியாக முதல் அறிவிப்பாக இன்று இந்த தொகுதியிலிருந்து பழனியாண்டி தந்திருக்கிறார். ரூ.50 லட்சம் நிதியுடன்  நிறுத்த மாட்டார். தொடர்ந்து இன்னும் நாம் எதிர்பார்க்கக் கூடிய நிதியை விட அதிகம் தருவார் என்ற நம்பிக்கை உண்டு. இந்த திராவிட மாடல் ஆட்சியைப் பொருத்தவரைக்கும் உறுதியாக தொடக்கத்தில் இருந்து நாங்கள் சொல்லுகிறோம் இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் எல்லாருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது யாரையும் விட்டு விட மாட்டோம். இங்கே மகிழ்ச்சி கடலில் மணவிழா கண்டிருக்கக்கூடிய மணமக்களை அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்பது. இவ்வாறு அவர் பேசினார்.