காலத்தோடு திறக்கப்பட்ட காவிரி நீர் காரணமாக கடைமடை இந்தாண்டு 45 ஆயிரம் ஏக்கரில் குறுவை விவசாயத்தை மேற்கொண்ட விவசாயிகள். அதனைத் தொடர்ந்து சம்பா மற்றும் தாளடி பயிர்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்தனர் பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் பயிர்கள் பாதித்த மாவட்டத்தில் நாகை மாவட்டம் ஒன்று.

 



 

கன மழையால் பயிர்கள் பாதித்ததால் மறு நடவு செய்த பல்வேறு கிராமங்களில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதால் 3 வது முறைசாகுபடி செய்து அறுவடை செய்த விடா கொண்டன் விவசாயிகளும் இருப்பதால்தான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகள் வந்த வண்ணம் உள்ளது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கடும் இன்னல்களுக்கு துயரத்திற்கும் ஆளாகி உள்ளார்கள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டும் பனியிலும் கடுமையான வெயிலிலும் தங்களை வருத்திக்கொண்டு நெல் மூட்டைகளை பாதுகாத்து வருகின்றனர் விவசாயிகள். 

 



 

விடாமுயற்சியால் கண்டு முதல் கூட காண முடியாத நிலையிலும் இருந்த பயிர்களை காப்பாற்றி அதன் மூலமாக வந்த குறைந்த அளவு நெல்லை நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர் ஆனால் அதனை கண்டு கொள்ளாத அதிகாரிகள் அலட்சியப் போக்கினால் ஆன்லைன் முறை என தெரிவித்து அவர்களை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சான்று பெறவும், பெற்றபின்னர் வேளாண்மைத் துறைக்கும் சென்று சான்றுபெற வேண்டுமென அலைய விடுகிறார்கள்.

 



 

பின்னர் அந்த சான்றிதழை பெற்று வந்த பின்னர் இதனை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து மீண்டும் ஒரு முறை கிராம நிர்வாக அலுவலர்கள் அனுமதி அளித்த பின்பே நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிப்பதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள்  ஆன்லைன் சென்றால் அங்கு எந்தவிதமான பதிவையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆன்லைன் இல்லை அலுவலகங்களுக்கு செல்லும் போது அங்கு அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகள் அங்குமிங்கும் அலையும் நிலை இத்தனை நிலைகளையும் தாண்டி தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்தாலும் அவற்றை நேரடி நெல் கொள்முதல் காலத்தில் கொள்முதல் செய்வதில்லை இதனால் விவசாயிகள் பலரும் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இரவு பகலாக தங்களது நெல் மூட்டைகளோடு காத்து கிடக்கின்றனர்.

 



 

கடந்த ஆண்டுகளில் ஜனவரி மாத முடிவில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலும் நாகை மாவட்டத்தில் நெல் கொள்முதல் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும், வழக்கம் போல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் விவசாயிகள் உலகிற்கே உணவளிக்கும் விவசாயிக்கு ஏற்பட்டுள்ள வேதனை என்பது சொல்ல முடியாத அளவில் உள்ளது கடனை வாங்கி, தங்க நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்து என்றாவது ஒருநாள் மீட்டுவிடலாம் என்றால் அவர்களுக்கு சோதனைக்கு மேல் சோதனையும் வேதனையும் வந்து சேர்ந்துள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் நெல்மணிகளை விற்பனை செய்ய முடியாமல் நாகை கடைமடை  விவசாயிகள் தவித்து வருவதால் தமிழக அரசு ஆன்லைன் முறையை ரத்து செய்ய உரிய உத்தரவு பிறப்பித்து விவசாயிகளை காத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.