தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக்கழகம் கட்டுப்பாட்டில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றனர். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொண்டு அவற்றுக்கான பணத்தினை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது.




இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய கால தாமதம் ஆவதால்  மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் அடுக்கிவைத்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது பெய்யும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடையும் வேளையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்களும் 5 தினங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரிகள் தெரித்துள்ளனர்.




இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கணக்குகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு என்ற அடிப்படையில் கொள்முதல் நிலையங்களில் காணக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படிபடையில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் 2020-21 ஆம் ஆண்டிற்கான கணக்கு முடிக்கும்  பணிகளுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு கொள்முதல் செய்யும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட 115 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டுவந்து  காயவைத்து அடுக்கிவைத்து விற்பனை செய்து வருகின்றனர். கணக்கு முடிவுற்றதும் மீண்டும் 5 தினங்கள் கழித்து 6 ஆம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.




இந்நிலையில் திடீரென கணக்கு முடிப்பு பணிகளுக்காக   5 நாட்களுக்கு கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து கொள்முதல் நிலையங்களை மூடி உள்ளதால்,  அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக நாள் கணக்கில் கொள்முதல் நிலைய வாசலில் விவசாயிகள் காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறுவடை சமயத்தில் அடிக்கடி மழைபெய்வதால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டது. மேலும் தற்போது கொள்முதல் நிலையம் 5 நாட்களுக்கு  மூடப்பட்டதால் மழையில் நெல்லை பாதுகாக்க முடியாத சூழல் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.