நாகை நகராட்சி தூய்மையான நகராட்சியாக மாற்றும் திட்டத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி சார்பில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை பொருட்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சேவா பாரதி சேவாபாரதி சுனாமி குடியிருப்பு பகுதியில் நகராட்சித் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ஒரு டாடா ஏஸ் வண்டி, 16 குப்பை அள்ளும் மூன்று சக்கர வண்டிகள், குப்பை அள்ளுவதற்கான உபகரணங்கள் பணியாளர்களுக்கான மழைக் கோட்டுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் ஓஎன்ஜிசி நிர்வாகிகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மழைக்கோட்டுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன் ஆகியோர் வழங்கினர். மேலும் நாகப்பட்டினம் நகராட்சி முழுவதும் 12 நாட்கள் நடைபெறும் மெகா தூய்மை பணியையும் தொடங்கி வைக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் காலை 8 மணிவரை கடும் பனிப்பொழிவு - எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கடும் அவதி
நாகை மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவு கொட்டுகிறது, நாகை வேளாங்கண்ணி கீவளூர் திருமருகள் திட்டச்சேரி வலிவலம் திருக்குவளை மீனம்ம நல்லூர் நிறுத்தின மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. நாகை மாவட்டத்தில் கோடியக்கரை வனவிலங்கு மற்றும்
பறவைகள் சரணாலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் மற்றும் ஆன்மீக ஸ்தலங்களும் சுற்றுலா தலங்களும் அதிகமிருப்பதால் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய பக்தர்களும் யாத்ரீகர்களும் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
இன்று காலை 8 மணி வரை பனிப்பொழிவு நீடித்ததால் நாகை காரைக்கால் சாலை, நாகை திருவாரூர் சாலை, நாகை திருத்துறைப்பூண்டி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் பனிப்பொழிவு காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே செல்கின்றனர். மேலும் நாகை மாவட்டத்தில் மாமரம், முந்திரி விவசாயமும் கடற்கரையோர மணற்பாங்கான இடத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மா மற்றும் முந்திரி பூத்திருக்கும் நிலையில் இந்த பனிப்பொழிவு காரணமாக பூக்கள் கருகி வருவதோடு பெருமல் அதிக மகசூல் பாதிக்கப்படுவதால் வருமான இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதேபோல் மீனவ கிராமங்களில் இருந்தும் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்தும் தங்களது படகில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் பனிப் பொழிவின் காரணமாக கடலில் கடும் சவாலாக செல்கின்றனர்.