தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட இயற்கை வளக்கொள்ளைகளை தடுத்து நிறுத்த தாய்நிலம் பாதுகாப்பு பேரமைப்பு என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுவதாக திரைப்பட இயக்குநர், தமிழர் நலப்பேரியக்க தலைவருமான மு.களஞ்சியம் அறிவித்துள்ளார். இதுகுறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் இயற்கைவளக் கொள்ளைகளை இதற்கு முன்னர் செயல்பட்டு வந்த பல்வேறு இயக்கங்களால் தடுத்து நிறுத்த முடியாத காரணத்தாலும், இதற்கு முன்பு செயல்பட்டு வந்த மீத்தேன், பெட்ரோலிய மண்டல எதிர்ப்பு இயக்கங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பின்னால் சென்றுவிட்ட காரணத்தால் தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்து ஒரு பேரியக்கத்தை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனது தலைமையில் இந்த பேரியக்கத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊக்கம் அளித்தார். மேலும், தமிழகத்தில் தமிழ் தேசிய தளத்தில் இயங்குகிற தமிழர் தேசிய முன்னணி, மருது மக்கள் இயக்கம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், வனவேங்கைகள் கட்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இயக்கத்தினர் இந்த பேரியக்கத்தை தொடங்க ஆதரவு அளித்துள்ளனர். தஞ்சை மண்டல மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் இந்த பேரியக்கத்தின் தொடக்க அறிவிப்பை மயிலாடுதுறையில் வெளியிடுகிறேன்.
நாங்கள் தொடங்கியுள்ள இந்த பேரியக்கத்தில் இணைய திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக தவிர்த்த இந்த மண்ணின் மீது அக்கறை கொண்ட அனைவரையும் அழைக்கிறோம். இந்த அமைப்புக்கு தாய்நிலம் பாதுகாப்பு பேரமைப்பு என்ற பெயரை சூட்டியுள்ளோம். இந்த பேரமைப்பில் ஏற்கெனவே மீத்தேன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் அமைப்பினரையும் வரவேற்கிறோம். இதன் பின்னர் எங்களோடு இணைய உள்ள பிற கட்சிகள், இயக்கங்களை ஒருங்கிணைத்து கலந்தாலோசித்த பின்னர் அடுத்தகட்ட நகர்வு குறித்து அறிவிக்கப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
உகாண்டாவில் இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் அறை அருகே மனித வெடி குண்டு தாக்குதல்: 2 பேர் பலி!
இதற்கு தொடக்க விழாவை நடத்தாமல் சோழ மண்டலத்தில் உள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை அல்லது திருவாரூரில் டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றார். இக்கூட்டத்தில், நாம் தமிழர், தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
TN College Exam: கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது - உயர்கல்வி துறை
உலகப்புகழ்பெற்ற தாராசுரம் கோயிலில் தேங்கும் மழைநீரால் நோய்த்தொற்று பரவும் அபாயம்