தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வு தான் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே நடைபெறும் என்றும், கல்லூரிகளில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது என்று உயர்கல்வி துறை அறிவித்துள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராடி வரும் நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் உயர்கல்வித்துறை திட்டவட்டமாக கூறியுள்ளது. 


 






 


கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையினை கட்டுப்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்க தமிழத்தில் உள்ள பள்ளிகளோடு சேர்த்து பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் என அனைது தனியார் மற்றும் அரசு கல்லூரிகளும் மூடப்பட்டது. இதனையடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் இணைய வழி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அரசும் கல்லூரி நிர்வாகமும் அறிவித்த நிலையில், கடந்த ஒன்றறை ஆண்டுகளாக இணைய வழியில் கல்வி பயின்று வந்தனர்.  இதனையடுத்து ஒன்றறை ஆண்டுகளுக்கு கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின.


இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் நேரடியாக தேர்வுகள் நடைபெறும் என தேர்வுக்காண அட்டவணைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். இந்நிலையில் நேரடியாக தேர்வு நடத்துவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த செமஸ்டர்களை போல இணைய வழியிலேயே இம்முறையும் தேர்வுகளை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண